அமெரிக்க காங்கிரசின் மேல் அவையான Senate 100 செனட்டர்களையும், கீழ் அவையான House 435 உறுப்பினர்களையும் கொண்டது. House ஏற்கனவே சில இஸ்லாமிய உறுப்பினர்களை கொண்டுள்ளது. வரும் நவம்பர் Midterm தேர்தலில் Abdul El-Sayed என்பவர் முதலாவது இஸ்லாமிய செனட்டர் ஆகலாம் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொது தேர்தலில் போட்டியிடுவோரை தெரிவு செய்ய தற்போது உட்கட்சி தேர்தல்கள் இடம்பெறுகின்றன.
Michigan மாநிலத்தில் Democratic கட்சி சார்பில் செனட்டர் பதவிக்கு போட்டியிட இஸ்லாமியரான Abdul Al-Sayed என்பவரும் (41 வயதான வைத்தியர்), Haley Stevens என்பவரும் உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டனர்.
Al-Sayed, Stevens ஆகிய இருவரும் பொதுவாக ஒரே கொள்கைகளை கொண்டிருந்தாலும் Al-Sayed இஸ்ரேல் காசாவில் செய்யும் குற்றங்களை வன்மையாக கண்டித்து, இஸ்ரேலை தண்டிக்க அழைத்தார். ஆனால் Stevens இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதனால் Al-Sayed வெற்றி அடைவதை தடுக்க இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் களம் இறங்கின. Al-Sayed க்கு எதிராக American Israel Public Affairs Committee (AIPAC) அமைப்பு $54 மில்லியன் செலவில் விளம்பரங்கள் செய்தது. Center for Democratic Priorities என்ற அமைப்பு Al-Sayed க்கு எதிராக $6.5 மில்லியன் செலவு செய்தது. ஆனாலும் Al-Sayed நேற்றைய உட்கட்சி தேர்தலில் வென்றுள்ளார்.
