அமெரிக்க மற்றும் உலக புள்ளிகளுக்கு 18 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகளை வழங்கிய Jeffrey Epstein என்பவர் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (Epstein files) பகிரங்கம் செய்ய அமெரிக்காவின் காங்கிரஸ் வாக்கெடுப்பு மூலம் உத்தரவிட்டுள்ளது.
ரம்பின் Republican கட்சி உறுப்பினர், Democratic கட்சி உறுப்பினர் உள்ளடங்க மொத்தம் 427 காங்கிரஸ் உறுப்பினர் ஆவணங்களை வெளியிடுவதற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். Clay Higgins என்ற Republican உறுப்பினர் ஒருவர் மட்டுமே எதிராக வாக்களித்து உள்ளார்.
அமெரிக்காவில் யூத குடும்பத்தில் பிறந்த எப்ஸ்-ரீன் (Epstein) ஆரம்பத்தில் ஆசிரிய பணியை கொண்டிருந்தாலும் அங்கிருந்து விரட்டப்பட்ட இவர் பின் முதலீட்டு துறையில் பணியாற்றினார். பின் இவர் அமெரிக்க, மற்றும் உலக செல்வந்தர்களுக்கும், அரசியில் புள்ளிகளுக்கும் இளவயது பெண்களை அறிமுகப்படுத்தும் வேலையில் இறங்கினார். இவருக்கு உதவியாக Ghislaine Maxwell என்ற இவரின் நண்பி இருந்துள்ளார்.
பிரித்தானியாவின் இளவரசர் அன்ரூ (Prince Andrew), அமெரிக்க சனாதிபதி ரம்ப், முன்னாள் சனாதிபதி பில் கிளின்டன், உலகின் முதலாவது செல்வந்தர் இலான் மஸ்க், Microsoft Bill Gates போன்ற பலரின் பெயர்கள் எப்ஸ்-ரீன் ஆவணங்களில் உள்ளன. இதில் சிலரின் வாழக்கை மேற்படி விசயம் படிப்படியாக கசிய ஆரம்பித்த பின் முறிந்து உள்ளது. Anrew அன்மையில் இளவரசர் பதவியை இழந்து இருந்தார். Bill Gates குடும்ப முறிவுக்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.
2019ம் ஆண்டு ஜூலை 6ம் திகதி sex traffcking of minors குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட எப்ஸ்-ரீன் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி சிறையில் தூங்கி தற்கொலை செய்தார் என்று கூறப்படுகிறது. மக்கள் இந்த மரணத்தில் சந்தேகம் கொள்ள, FBI ஒரு CCTV வீடியோவை பகிரங்கம் செய்து தற்கொலையை நிரூபிக்க முயன்றது. ஆனால் அந்த வீடியோவில் 2 நிமிடம், 53 செக்கன்கள் வெட்டப்பட்டு இருந்தது. பெரும் புள்ளிகளை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த மரணம் நிகழ்துள்ளது என்று பலரும் கருதுகின்றனர். ஆனாலும் தற்போது முழு உண்மைகளும் வெளிவர உள்ளன.
அதில் ரம்பின் பங்கும் வெளிவரும். Epstein தனது பெண் ஊழியர்களை திருடியதால் தான் அவருடன் கொண்டிருந்த தொடர்பை நிறுத்திவிட்டேன் என்று ரம்ப் அண்மையில் கூறியிருந்தார்.
ரம்பின் செல்வாக்கும் அமெரிக்காவில் சரிய ஆரம்பித்ததால், முன்னர் ரம்புடன் ஒட்டி இருந்தவர் பலரும் மெல்ல நழுவ ஆரம்பித்து உள்ளனர். 2026ம் ஆண்டில் இடம்பெறவுள்ள mid-term தேர்தலில் தப்புவதே இவர்களின் நோக்கு.
பிரான்சில் பிறந்த இவரின் நண்பி Maxwell தற்போது அமெரிக்காவில் 20 ஆண்டு சிறை தண்டனையில் உள்ளார்.
