Eurovision போட்டியில் இருந்து இஸ்ரேலை விலக்க அழுத்தம்

Eurovision போட்டியில் இருந்து இஸ்ரேலை விலக்க அழுத்தம்

இந்த ஆண்டுக்கான Eurovision பாடல் போட்டியில் இருந்து இஸ்ரேலை விலக்குமாறு பல இசை துறையினர் அழுத்தம் வழங்கி வருகின்றனர். இஸ்ரேல் காசாவில் பாலஸ்தீனர்களுக்கு செய்யும் கொடுமைகளை கண்டிக்கவே இந்த அழுத்தம் முனைகிறது.

சுமார் 1,400 பின்லாந்து இசை துறையினர் இஸ்ரேல் காசாவில் செய்வது war crimes என்றும் அதனால் இஸ்ரேல் தடை செய்யப்பட வேண்டும் என்று கையொப்பம் இட்ட முறைப்பாடு மூலம் கேட்டுள்ளனர். இஸ்ரேல் புறக்கணிக்கப்படாவிட்டால் தாம் Eurovision போட்டியில் பங்கு கொள்ளப்போவது இல்லை என்றும் கூறியுள்ளனர்.

Eurovision போட்டிக்கு பின்லாந்து சார்பில் போட்டியிடவுள்ளவரை தெரிவு செய்யும் பணியில் உள்ள Yle ரஷ்யாவுக்கு ஒரு நீதியையும், இஸ்ரேலுக்கு இன்னொரு நீதியையும் நடைமுறை செய்ய முனைகிறது என்றும் இசை துறையினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

ரஷ்யா யூகிரேனை தாக்கியவுடன் 2022ம் ஆண்டு Eurovision போட்டியில் இருந்து ரஷ்யாவை விலக்க Yle முன்னின்று இயங்கியதாகவும் ஆனால் இஸ்ரேல் விசயத்தில் Yle பின் நிற்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் Yle தாம் Eurovision போட்டியை செய்யும் European Broadcasting Union (UBU) இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்கும் வரை காத்திருப்பதாக கூறியுள்ளது.

கடந்த மாதம் ஐஸ்லாந்து இசை துறையினரும் இவ்வாறு கேட்டிருந்தனர்.

Eurovision 2024 மே மாதம் 7ம் திகதி ஆரம்பமாகும்.