முதலில் அமெரிக்காவின் இரு விமானிகளை கொண்ட F-15 Eagle வகை யுத்த விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. விழுந்த விமானிகளை காப்பாற்ற குறைந்தது இரண்டு அமெரிக்க Black Hawk ஹெலிகள் முயன்றன.
விழுந்த ஒரு F-15 விமானியை அமெரிக்க ஹெலிகள் காப்பாற்றி உள்ளன.
அப்போது இவ்விடத்தில் ஈரானின் படைகள் இருந்திருக்கவில்லை என்றாலும் இங்கிருந்த போலீசார் சுட்டதில் ஹெலிகள் சிறு பாதிப்புகளுடன் மீண்டன.
பின்னர் இவ்விடத்துக்கு விரைந்த A-10 Thunderbolt யுத்த விமானம் ஒன்றும் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளது. இதன் விமானிகளையும் அமெரிக்கா தேடுகிறது.
2027ம் ஆண்டுக்கான வரவுசெலவில் பாதுகாப்புக்கு வெள்ளை மாளிகை $1.5 டிரில்லியனை ($1,500 பில்லியன்) கேட்டுள்ளது.இத்தொகை முன்னைய ஆண்டிலும் 40% ஆல் அதிகரித்துள்ளது.
