Facebook சிறுவர்களை அடிமை ஆக்கியது, அமெரிக்காவில் வழக்கு 

Facebook சிறுவர்களை அடிமை ஆக்கியது, அமெரிக்காவில் வழக்கு 

Meta நிறுவனத்தின் Facebook, Instagram போன்ற social media இணைய தளங்கள் சிறுவர்களை அடிமை ஆக்கின என்று குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் செவ்வாய் வழக்கு ஒன்று ஆரம்பமாகி உள்ளது.

இந்த வழக்கு அடுத்த 6 கிழமைகளுக்கு வாதாடப்படும். சில முன்னாள் Facebook அதிகாரிகளும் Facebook க்கு எதிரான சாட்சிகள் ஆகியுள்ளனர்.

பல மில்லியன் எண்ணிக்கையிலான 11 மற்றும் 12 வயது சிறுவர்கள் Facebook கணக்கை கொண்டிருந்தமையை Facebook அறிந்தும் அவற்றை கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் Facebook சுமார் 100,000 சிறுவர்களே அவ்வகையில் கணக்குகளை கொண்டிருந்ததாக கூறுகிறது.

Facebook சிறுவர்களை அடிமை (addiction) ஆக்கவில்லை என்றும் Facebook வாதாடுகிறது.

இந்த வழக்கில் Facebook தோல்வி அடைந்தால் அது Facebook ஐ பாரிய அளவில் மாற்றும். இம்முறை 4 மாநிலங்கள் மட்டும் $1.4 டிரில்லியன் நட்டஈடு கேட்கின்றன.

2023ம் ஆண்டு கலிபோர்னியா, நியூ யார்க் உட்பட 29 மாநிலங்கள் Facebook சிறுவர்களின் தரவுகளை (data) பாதுகாக்க தவறி விட்டது என்றும் வேறு ஒரு வழக்கை தொடர்ந்து இருந்தன.