FIFA 2026: 11 அமெரிக்க, 3 மெக்ஸிக்கோ, 2 கனடிய நகரங்களில்

FIFA 2026: 11 அமெரிக்க, 3 மெக்ஸிக்கோ, 2 கனடிய நகரங்களில்

2026ம் ஆண்டுக்கான FIFA உதைபந்தாட்ட போட்டிகள் இடம்பெறவுள்ள அமெரிக்க, மெக்ஸிக்கோ, கனடிய நகரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 2026ம் ஆண்டிலேயே முதல் தடவையாக 3 நாடுகள் FIFA போட்டிகளை வைக்க உள்ளன. அந்த நகரங்கள் பின்வருமாறு:

கனடா: Toronto, Vancouver

Mexico: Guadalajara, Monterrey, Mexico City 

அமெரிக்கா: Atlanta, Boston, Dallas, Houston, Kansas City ,Los Angeles, Miami, New York, Philadelphia, San Francisco, Seattle

மொத்தம் 80 போட்டிகளில் 10 போட்டிகள் கனடாவிலும், 10 போட்டிகள் மெக்ஸிகோவிலும் இடம்பெறும். மிகுதி 60 போட்டிகள் அமெரிக்காவில் இடம்பெறும்.

2026ம் ஆண்டுக்கான போட்டியில் மொத்தம் 48 நாடுகளின் குழுக்கள் போட்டியிடும். கடந்த காலங்களில் 32 நாடுகளே இறுதியில் போட்டியிட்டன.

2022ம் ஆண்டுக்கான FIFA உதைபந்தாட்ட போட்டிகள் இந்த ஆண்டு நவம்பர் 21ம் திகதி முதல் டிசம்பர் 18ம் திகதி வரை கட்டாரில் (Qatar) இடம்பெறும்.