Gambian சர்வாதிகாரியின் வீட்டை அமெரிக்க நீதிமன்றம் பறித்தது

Gambian சர்வாதிகாரியின் வீட்டை அமெரிக்க நீதிமன்றம் பறித்தது

The Gambia என்ற மேற்கு ஆபிரிக்க நாட்டை ஆண்ட Yahya Jammeh என்பவரின் மனைவிக்கு சொந்தமான மாளிகை போன்ற வீடு ஒன்றை அமெரிக்க நீதிமன்றம் பறித்து உள்ளது. சுமார் $3 மில்லியன் பெறுமதியான இந்த வீட்டை விற்பனை செய்து அந்த பணத்தை சர்வாதிகாரியால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க உள்ளது நீதிமன்றம்.

வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள Maryland மாநிலத்திலேயே சர்வாதிகாரியின் இந்த மாளிகை உள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள Gambia மக்கள் உளவு அறிந்து நீதிமன்றத்துக்கு எடுத்து உள்ளனர். ஊழல் பணம் மூலமே இந்த மாளிகை கொள்வனவு செய்யப்பட்டது என்று Democratic Union of Gambian Activists அமைப்பின் உறுப்பினர் நீதிமன்றில் வாதாடி உள்ளனர்.


மேற்படி மாளிகை அளவிலான வீடு MYJ Family Trust என்ற நிறுவனத்தின் பெயரிலேயே கொள்வனவு செய்யப்பட்டு உள்ளது.

சுமார் 22 ஆண்டுகள் ஆட்சி செய்த Jammeh 2017ம் ஆண்டு விரட்டி அடைக்கப்பட்டார். விரட்டி அடிக்கப்பட்ட இவர் Equatorial Guinea என்ற நாட்டுக்கு தப்பி ஓடியுள்ளார். இவர் சுமார் $300 மில்லியன் பணத்தை திருடி உள்ளதாக கூறப்படுகிறது. இவரிடம் 281 சொத்துக்கள், சுமார் 100 வங்கி கணக்குகள், அமெரிக்காவிலும், மொராக்கோவிலும் வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.

2010ம் ஆண்டு Petroleum Company கொண்டிருந்த ஏகபோக (monopoly) இறக்குமதி உரிமையை இழக்க இருந்தது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உடனே சர்வாதிகாரியை அணுகி இருந்தார். பின்னர் உரிமை 2014ம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டது. அதே தினம் அந்த நிறுவனம் $1 மில்லியன் பணத்தை MYJ Family Trust கணக்கில் வைப்பிட்டது. இவ்வாறு பல ஊழல்கள் தற்போது பகிரங்கத்து வந்துள்ளன.