Google தேடுதலை Apple பயன்படுத்த Google வழங்கும் $12 பில்லியன்

Google தேடுதலை Apple பயன்படுத்த Google வழங்கும் $12 பில்லியன்

Google தேடுதல் (search engine), Android OS ஆகியன Google நிறுவனத்துக்கு சொந்தமானவை. கூகுளுக்கு போட்டியாக iPhone, iPad போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் Apple. ஆனால் அவை இரண்டும் இணைய தேடுதலில் நுகர்வோர் நலனனுக்கு எதிரான வகையில் இணைந்து செயற்படுவதாக அமெரிக்க அரசு கூகிள் மீது தாக்கல் செய்த antitrust வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டு Google, Apple ஆகிய நிறுவனங்கள் இரண்டும் இரகசியமாக கூடி, iPhone போன்ற Apple தயாரிப்புகள் Google நிறுவனத்தின் தேடுதலை default (தனியார் கொள்வனவின்போது உள்ளடக்கிய) தேடுதலாக பயன்படுத்த இணங்கி இருந்தன. தனது search engine னை Apple பயன்படுத்துவதற்கு பிரதியுபகாரமாக கூகிள் நிறுவனமே ஆண்டுக்கு $12 பில்லியன் செலுத்துகிறது. அதாவது தொழில்நுட்பத்தையும் வழங்கி, ஆண்டும் $12 பில்லியனையும் வழங்குகிறது கூகிள்.

Search engine மூலம் பாவனையாளரை கட்டுப்படுத்தி, விளம்பரங்கள் செய்து உழைப்பதே கூகிளின் நோக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் போட்டிக்கு வேறு search engine தோன்றாமல் தடுக்க கூகிள் முனைகிறது என்கிறது குற்றச்சாட்டு. தற்போது உலக அளவில் இணைய தேடுதல்களின் 90% கூகிள் search engine மூலமே செய்யப்படுகிறது.

கூகிள் போன்று தனியார் தரவுகளை கொள்ளையிடாத www.duckduckgo.com போன்ற தேடுதல் மிக குறைந்த மக்களாலேயே பயன்படுத்தப்படுகிறது. Duckduckgo தனியார் தரவுகளை பாதுகாக்க சிறந்த search engine ஆகும்.

Google வழங்கும் $12 பில்லியனே Apple நிறுவனத்துக்கு கிடைக்கும் மிகப்பெரிய தனியொரு வருமானம் ஆகும். அது Apple நிறுவன ஆண்டு இலாபத்தின் சுமார் 14 முதல் 20% ஆகும்.