அமெரிக்க சனாதிபதி ரம்பின் பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth இன் பதவியை பறிக்கும் பணியின் முதல் கட்டமாக impeachment நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது. Impeachment செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர் Thomas Massie என்ற ரம்பின் Republican கட்சி உறுப்பினரே.
பல தடவைகள் House உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த Massie ஈரான் யுத்தம் தொடர்பாக ரம்புடன் முரண்பட்டதால் mid-term தேர்தலுக்கு முன்னான உட்கட்சி தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார். அதனால் Massie ஜனவரி மாதம் வரை மட்டுமே House உறுப்பினராக பதவி வகிப்பார்.
உட்கட்சி தேர்தலில் ரம்பின் ஆதரவாளரான Ed Gallrein பெரும் செலவில் வெற்றி அடைந்திருந்தார். இந்த உட்கட்சி தேர்தலில் Gallerin க்கு ஆதரவாக இஸ்ரேல் ஆதரவு அமைப்புகள் $32 மில்லியன் செலவளித்துள்ளன. அமெரிக்க வரலாற்றில் அதி கூடிய பண செலவில் இடம்பெற்ற House உட்கட்சி போட்டி இதுவாகும்.
இந்த impeachment முயற்சியை Republican கட்சி உறுப்பினர் ஆரம்பித்து இருந்தாலும் Democratic கட்சியிடம் House சபையின் பெரும்பான்மை இருப்பதால் impeachment இடம்பெறலாம்.
ஆனால் House இல் impeachment செய்யப்பட்ட ஒருவரின் பதவியை பறிக்க Senate 2/3 ஆதரவை வழங்க வேண்டும். Democratic கட்சியிடம் Senate பெரும்பான்மை இருந்தாலும் 2/3 பெரும்பான்மை இல்லை. அதனால் Hegseth இன் பதவி பறிக்கப்படல் நிறைவேறாது போகலாம்.
மறுபுறம் அவமானத்தை தடுக்கும் நோக்கில் Hegseth தானாகவும் பதவியை விட்டு நீங்கலாம், அல்லது ரம்ப் ஈரான் யுத்த தோல்வியில் இருந்து நழுவ Hegseth இன் பதவியை பறிக்கலாம்.
