Hormuz மூடலால் ரம்ப் நெருக்கடியில், 140 மில்லியன் பரலுக்கு அனுமதி

Hormuz மூடலால் ரம்ப் நெருக்கடியில், 140 மில்லியன் பரலுக்கு அனுமதி

தகுந்த காரணம் இன்றி தம்மை தாக்கிய அமெரிக்காவையும், இஸ்ரேலையும் அவற்றுக்கு உதவிய UAE, பஹ்ரைன், கட்டார், சவுதி, குவைத் போன்ற நாடுகளையும் தண்டிக்க  ஈரான் Hormuz நீரிணையை மூடி உள்ளது. இதனால் ம்=அமெரிக்க சனாதிபதி பெரும் நெருக்கடிக்கு உள்ளானார்.

உலக எரிபொருள் விலையை குறைக்கும் நோக்கில் ரம்ப் தற்போது ஈரான் 140 மில்லியன் பரல்கள் எரிபொருளை தடை இன்றி விற்பனை செய்யலாம் என்று கூறியுள்ளார். இந்த எரிபொருளை மேற்கு நாடுகளுக்கு விற்பனை செய்தால் அதற்கான பணம் ஈரானை அடையும் என்பது சந்தேகமே.

எரிபொருள் மட்டுமன்றி UAE, பஹ்ரைன், கட்டார், சவுதி, குவைத் ஆகிய நாடுகளில் உள்ள 100 மில்லியன் மக்களுக்கு தேவையான ஏனைய பொருட்களும் Hormu ஊடாகவே செல்கின்றன.

சவுதியின் 80% உணவுகளும், UAE யின் 90% உணவுகளும், கட்டாரின் 98% உணவுகளும் Hormuz ஊடாகவே கிடைக்கின்றன. அதனால் நீண்ட கால Hormuz தடை மேற்படி நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட காரணம் ஆகும்.