Houthi மீது அமெரிக்கா, பிரித்தானியா தாக்குதல்

Houthi மீது அமெரிக்கா, பிரித்தானியா தாக்குதல்

யெமென் (Yemen) ஆயுத குழுவான கூத்தி (Houthi) மீது அமெரிக்காவும், பிரித்தானியாவும் இன்று தாக்குதல் செய்துள்ளன. நெதர்லாந்து, அஸ்ரேலியா, கனடா, பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்த தாக்குதல்களுக்கு உதவி செய்துள்ளன.

யெமென் நாட்டின் பெரும் பகுதியை தம் கட்டுப்பாட்டுள் வைத்துள்ள கூத்தி ஆயுத குழு காசா பலஸ்தீனியருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் செங்கடல் ஊடு செல்லும் இஸ்ரேல் தொடர்பான கப்பல்கள் மீது தாக்குதல்கள் செய்கின்றன.

செங்கடல் ஊடான வர்த்தக கப்பல் போக்குவரத்து தடைப்படுவதாலேயே தாம் தாக்குதல்களை செய்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் தற்போது அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் மெல்ல பங்கெடுக்கின்றன.