Hubble தொலை நோக்கிக்கு பதிலாக James Webb Space Telescope

Hubble தொலை நோக்கிக்கு பதிலாக James Webb Space Telescope

1990ம் ஆண்டு ஏவப்பட்ட Lockheed Martin நிறுவன தயாரிப்பான Hubble Telescope பல பில்லியன் light year தொலைவில் உள்ள galaxy களை படம் பிடித்து காட்டியது. தற்போதும் Hubble தனது சேவையை செய்து வருகிறது. ஆனாலும் Hubble சுமார் 31 ஆண்டு பழைய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. பதிலுக்கு வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி ஏவப்படவுள்ள James Webb Space Telescope (JWST) தற்கால நுட்பங்களை கொண்ட தொலைநோக்கியாக செயற்படவுள்ளது.

JWST தொலைநோக்கி அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சி. இதற்கு சுமார் $10 பில்லியன் செலவாகி உள்ளது. வரும் டிசம்பர் 18ம் திகதி இது Ariane-5 ஏவுகணை மூலம் ஏவப்படும். இது பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் km தூரத்தில் நிலை கொள்ளும். இது நிலைகொள்ளவுள்ள இடத்தை second Lagrange point அல்லது L2 என்பர். JWST பூமியை வலம் வராது, ஆனால் பூமியுடன் இணைந்து சூரியனை வலம் வரும். தற்போதைய Hubble சுமார் 570 km உயரத்தில் பூமியை வலம் வருகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் 384,400 km மட்டுமே.

JWST நிலை கொள்ளவுள்ள இடம் பூமியின் ஈர்ப்பு விசையையும், சூரியனின் ஈர்ப்பு விசையையும் சமஅளவில் கொண்டிருக்கும். சூரியனின் பக்கத்தில் இதன் வெப்பநிலை +85 C ஆக இருக்கையில், மறுபக்கத்தில் வெப்பநிலை -233 C ஆக இருக்கும்.

JWST 22 மீட்டர் பரப்பை கொண்டது. ஆனால் தற்போதைய Hubble 13.2 மீட்டர் பரப்பை மட்டுமே கொண்டது. JWST தொலைநோக்கி red மற்றும் infrared அலைகளை பயன்படுத்தும். தற்போதைய Hubble தொலைநோக்கி visible மற்றும் ultraviolet அலைகளை பயன்படுத்துகிறது.

ஏவலுக்கு தயாரான இந்த தொலைநோக்கி கலிபோர்னியாவில் இருந்து தென் அமெரிக்காவில், மத்திய கோட்டுக்கு அருகே உள்ள French Guiana என்ற நாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. அங்குள்ள Kourou என்ற இடத்தில் இருந்து இது ஏவப்படும்.

விபரிப்பு வீடியோ:

மேலதிக விபரம்:
https://www.jwst.nasa.gov/content/about/orbit.html