ICJ சென்றதால் பலஸ்தீனருக்கு இஸ்ரேல் தண்டனை

ICJ சென்றதால் பலஸ்தீனருக்கு இஸ்ரேல் தண்டனை

தம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கருத்து கூறுமாறு பலஸ்தீனர் ஐ. நாவின் International Court of Justice (ICJ) க்கு சென்றதால் கோபம் கொண்ட இஸ்ரேல் பலஸ்தீனர் மீது மேலாதி தடைகளையும் விதித்து, தாம் வசூலிக்கும் பலஸ்தீனரின் வரிப்பணத்தையும் கைக்கொள்ள அறிவித்துள்ளது.

 ICJ உதவியை நாடும் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 31ம் திகதி இடம்பெற்றது. மொத்தம் 87 நாடுகள் ICJ நீதிமன்றின் உதவியை நாட ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. அமெரிக்கா, கனடா உட்பட மனித நேயம் பாடும் 26 மேற்கு நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா உட்பட 52 நாடுகள் வாக்களியாது இருந்தன.

இஸ்ரேல் பலஸ்தீனர் மீது விதிக்கும் சில மேலதிக தண்டனைகள் வருமாறு:

1. பலஸ்தீனரின் வரிப்பணத்தில் பாதிக்கப்பட்ட யூதர்களுக்கு உதவி செய்தல்.

2. Palestinian Authority அதிகாரிகள் வெளிநாடு செல்ல அனுமதி மாறுதல். அவர்களின் சம்பளத்தை குறைதல்.

3. ஆக்கிரமித்த நிலத்தில் பலஸ்த்தீனருக்கு மேலதிக கட்டுமான தடை விதித்தல்.

ICJ தீர்மானங்கள் வலுவானவை. ஆனால் அவற்றை நடைமுறை செய்ய அதனிடம் படை/போலீஸ் இல்லை. இது போலீஸ் இல்லாத நாட்டில் நீதிமன்றம் இயங்குவதை ஒத்தது.

கடந்த 55 ஆண்டுகளாக பலஸ்தீனர் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது.