IMF SDR பங்கீட்டில் சீன நாணயம் 1.36% ஆல் அதிகரிப்பு

IMF SDR பங்கீட்டில் சீன நாணயம் 1.36% ஆல் அதிகரிப்பு

International Monetary Fund (IMF) தனது Special Drawing Rights (SDR) என்ற currency basket பங்கீட்டில் சீன நாணயமான யுவானுக்கு (Yuan) 12.28% வழங்க சனிக்கிழமை தீர்மானித்து உள்ளது. இது முனைய பங்கீட்டுடன் ஒப்பிடுகையில் 1.36% அதிகம்.

2016ம் ஆண்டே சீன நாணயம் முதல் தடவையாக SDR கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அதற்கு முன் அமெரிக்க டாலர், யூரோ, பிரித்தானிய பௌண்ட்ஸ், ஜப்பானின் ஜென் ஆகிய 4 நாணயங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டு இருந்தன.

 2016ம் ஆண்டு முதல் SDR கணிப்பில் அமெரிக்க டாலர் 41.73% பெறுமதியையும், யூரோ 30.93% பெறுமதியையும், யுவான் 10.92% பெறுமதியையும், யென் 8.33% பெறுமதியையும், பௌண்ட்ஸ் 8.09$ பெறுமதியையும் கொண்டு இருந்தன.

புதிய கணிப்பின்படி அடுத்த மாதம் முதல் சீன யுவான் 12.28% பெறுமதியை கொண்டிருக்கும்.

அதேவேளை யூரோ 29.31% பெறுமதிக்கும், யென் 7.44% பெறுமதிக்கும், பௌண்ட்ஸ் 7.59% பெறுமதிக்கும் குறைக்கப்பட்டு உள்ளன.

தற்போதும் 41.07% உலக கொடுப்பனவுகள் அமெரிக்க டாலர் மூலமே செய்யப்படுகிறது. இது அமெரிக்க அரசுக்கு ஆதிக்கத்தை வழங்குகிறது. யூரோ மூலம் 35.36% கொடுப்பனவுகளும், யுவான் மூலம் 2.2% கொடுப்பனவுகளும் செய்யப்படுகின்றன.

சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக உயர்த்தி அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தில் இருந்து தன்னை விடுவிக்க பெரும் முயற்சிகள் செய்கிறது.