கணனிகள் தோன்றிய காலம் முதல் chip உலகில் முடிசூடா மன்னனாக இருந்த அமெரிக்க Intel நிறுவனம் அண்மையில் AI வல்லமையுடன் கூடிய nVIDIA வருகையால் பின் தள்ளப்பட்டது.
ஆனாலும் nVIDIA நிறுவனம் வியாழக்கிழமை Intel நிறுவனத்தில் $5 பில்லியன் முதலிடுகிறது.
Intel நிறுவனம் chip வடிவமைப்பு (design), உற்பத்தி (manufacturing) இரண்டிலும் வல்லமை கொண்டது. ஆனால் வடிவமைப்பில் வல்லமை கொண்ட nVIDIA விடம் உற்பத்தி வல்லமை இல்லை. அதனாலேயே nVIDIA தான் வடிவமைக்கும் chip உற்பத்திக்கு Intel நிறுவனத்தை நாடியுள்ளது.
2027ம் ஆண்டு Intel நடைமுறை செய்யவுள்ள 14A (1.4 nanometer) உற்பத்தி முறைமைக்கு nVIDIA இணைவு பயன் உள்ளதாக இருக்கும்.