கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் மீது தாக்குதலுக்கு சென்ற அமெரிக்க யுத்த விமானங்களில் F-15 ஒன்று சுட்டு விழுத்தப்பட்டு இருந்தது. அந்த விமானத்தின் விமானி உடனடியாக மீட்கப்பட்டு இருந்தார்.
தமது யுத்த விமானத்தை தாக்க முன் ஈரானின் drones பல கூட்டாக ஒரு jellyfish அமைப்பில் (formation) பறந்தன என்று விமானி அமெரிக்க அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். அந்த drones கூட்டம் ஒரு ‘தாய்’ drone ஐயும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கிய பல ‘சேய்’ drone களையும் கொண்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வகை நவீன ஆயுதங்கள் சீனா போன்ற நாடுகளிடம் இருந்தாலும் ஈரான் அவற்றை கொண்டிருப்பது அமெரிக்காவை வியக்க வைத்துள்ளது.
அதே யுத்த விமானத்தில் இருந்த ஆயுதங்களுக்கு பொறுப்பான அமெரிக்க விமானப்படை அதிகாரி 2 தினங்களுக்கு மீட்கப்பட்டார். அந்த மீட்புக்கு சுமார் $500 மில்லியன் செலவாகி இருந்தது.
