Nissan CEO Ghosn கைது, ஊழல் காரணம்

Ghosn

பிரபல ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனமான Nissan Motor Corporation தின் CEO மற்றும் Chairman பதவிகளை வகித்த Carlos Ghosn என்பவர் ஜப்பானிய அதிகாரிகளால் இன்று திங்கள் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளன.
.
பிரெஞ்சு வாகன நிறுவனமான Renault 1999 ஆண்டில் Nissan நிறுவனத்தில் பெரும் முதலீட்டை செய்திருந்தது. Ghosn அப்போதே Nissan நிறுவனத்தின் தலைமை பதவியை அடைந்திருந்தார். 2005 ஆம் ஆண்டில் அவர் Renault நிறுவனத்தின் தலைமை பதவியையும் அடைந்திருந்தார்.
.
இவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான 5 வருட காலத்துக்கான வருமானம் சுமார் 5 பில்லியன் ஜப்பானிய யென் ($44 மில்லியன்) என்று குறிப்பிட்டு உள்ளார். அனால் இவரின் உண்மையான வருமானம் சுமார் 10 பில்லியன் யென் என்கின்றனர் ஜப்பானிய அதிகாரிகள்.
.
Nissan நிறுவனமும் Ghosnனின் ஊழலை ஏற்றுக்கொண்டுள்ளது. இவருக்கு Nissan 4 வீடுகளை சட்டத்துக்கு முரணாக வழங்கி உள்ளது. அவை Rio de Janeiro (Brazil), Beirut (Lebanon), Paris, Amsterdam ஆகிய நகரங்களில் உள்ளன.
.
பிரேசிலில் பிறந்த Ghosn தற்போது பிரெஞ்சு, பிரேசில், லெபனான் ஆகிய நாடுகளில் குடியுரிமைகளை கொண்டவர்.

.