nVIDIA என்ற artificial intelligence வல்லமை கொண்ட chip களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (market capital) $4 டிரில்லியன் ($4,000 பில்லியன்) ஆகியுள்ளது. உலகில் nVIDIA மட்டுமே $4 டிரில்லியன் பெறுமதி கொண்ட நிறுவனம்.
ஆனாலும் ரம்ப் அரசு விதித்த தடைகள் காரணமாக nVIDIA சீன சந்தையை தற்போது இழந்துள்ளது.
சீன சந்தையை மீண்டும் கைப்பற்ற nVIDIA CEO Jensen Huang சில தினங்களில் சீனா செல்கிறார். அதற்கு முன் வியாழன் Huang அமெரிக்க சனாதிபதி ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடி உள்ளார்.
nVIDIA சீனாவுக்கு chip களை விற்பனை செய்வதை தடை செய்தால் சீனாவின் Huawei போன்ற நிறுவனங்கள் வளர அது வசதி செய்யும் என்று Huang ஏற்கனவே எச்சரித்து இருந்தார். சீனா மீதான தடையால் nVIDIA இந்த காலாண்டில் $8 பில்லியன் வருமானத்தை இழக்கிறது.
nVIDIA சீனாவுக்கு high-bandwidth memory, NVLink ஆகிய இரண்டு நுட்பங்களும் நீக்கப்பட்ட chip களை விற்பனை செய்ய முனைகிறது.