Pandora அறிக்கையில் ராஜபக்ச குடும்பமும் உள்ளது

Pandora அறிக்கையில் ராஜபக்ச குடும்பமும் உள்ளது

Pandora அறிக்கையில் Nirupama Rajapaksa, கணவர் Thirukumar Nadesan ஆகியோரின் சொத்துக்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன. அதில் Raja Ravi Varma வரைந்த 19ம் நூற்றாண்டு நாலு கை இலக்குமி (goddess Lakshmi) ஓவியம் ஒன்றும் அடங்கும்.

2018ம் ஆண்டு சுமார் $1 மில்லியன் பெறுமதியான 31 ஓவியங்கள் லண்டன் நகரில் இருந்து சுவிற்சலாந்தில் உள்ள Geneva Freeport க்கு அனுப்பட்டன என்று கூறுகிறது பன்டோரா அறிக்கை. பதிந்த தரவுகளின்படி அதன் உரிமை Samoa நாட்டில் பதியப்பட்ட Pacific Commodities Ltd என்ற பினாமி நிறுவனம் ஒன்றுக்கு உரியது. அனால் அது Thirukumar Nadesan என்பருக்கு உரியது என்கிறது பன்டோரா அறிக்கை.

Nadesan னின் மனைவி Nirupama Rajapaksa இலங்கையின் முன்னாள் அமைச்சர், ராஜபக்ச குடும்பத்தவர்.

Nadean குடும்பம் ஓவியங்கள், ஆடம்பர வீடுகள், பணம், பங்குச்சந்தை பங்குகள் என பல சொத்துக்கள் பினாமி நிறுவனங்கள் மூலம் கொண்டு உள்ளதாக பன்டோரா அறிக்கை கூறுகிறது.

2017ம் ஆண்டு அளவில் Nadesan குடும்பம் சுமார் $18 மில்லியன் சொத்தை பினாமி நிறுவனங்கள் மூலம் கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஈமெயில் ஒன்றின் கூற்றுப்படி 2011ம் ஆண்டு அளவில் Nadesanனின் மொத்த சொத்துக்கள் $160 மில்லியன் என்று கூறப்படுகிறது. ஆனால் ICIJ அந்த தொகையை உறுதி செய்ய முடியவில்லை என்றும் கூறியுள்ளது.

சுமார் 31 ஆண்டுகளுக்கு முன் இலங்கை விமான சேவைக்கு பஸ்கள் விற்பனை செய்த ஜேர்மனியின் Contrac GmnH என்ற பஸ் தயாரிப்பு நிறுவனம் Pacific Commodities Ltd நிறுவனத்தின் வாடிக்கையாளரே.

Nadesan 1991ம் ஆண்டு ஆரம்பித்து இருந்த Rosetti என்ற பினாமி நிறுவனம் மூலம் Sydney நகரில் உள்ள Darling Harbour பகுதியில் ஆடம்பர வீடுகளையும் கொள்வனவு செய்திருந்தார். இவர் பினாமி நிறுவனம் மூலம் லண்டன் Thames River ஓரம் கொள்வனவு செய்திருந்த வீடு ஒன்றை பின்னர் $850,000 க்கு விற்பனை செய்திருந்தார். சுமார் $4 மில்லியன் பெறுமதியான மேலும் இரண்டு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. இவை Channel Island பினாமி நிறுவனங்கள் மூலமே உரிமை கொள்ளப்பட்டு உள்ளன என்கிறது பன்டோரா அறிக்கை.

https://www.icij.org/investigations/pandora-papers/sri-lanka-rajapaksa-family-offshore-wealth-power/