Pandora கூறும் திருட்டு அரசியல் புள்ளிகளின் கருப்பு பணம்

Pandora கூறும் திருட்டு அரசியல் புள்ளிகளின் கருப்பு பணம்

பனாமா அறிக்கைகள் (Panama Papers) உலகின் திருட்டு அரசியல் புள்ளிகளின் கருப்பு பணத்தை உலகுக்கு காட்டியது போல் தற்போது பன்டோரா அறிக்கை (Pandora Papers) மேலும் பல திருட்டு அரசியல் புள்ளிகளின் கருப்பு பணத்தை உலகிற்கு காட்டுகிறது. இந்த அறிக்கையை International Consortium of Investigative Journalist (ICIJ) தயாரித்து உள்ளது.

இந்த அறிக்கைக்கு 14 தரவாளர் மூலம் பெறப்பட்ட 11,903,676 ஆவணங்களும், 2.94 terabytes (2.94 TB = 2,940 GB/gigabytes = 2,940,000 MB/megabytes) இலத்திரனியல் தரவுகளும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் 2,937,513 படங்கள், 1,205,716 ஈமெயில்கள் ஆகியனவும் அடங்கும்.

இந்த அறிக்கை 35 நிகழ்கால மற்றும் முற்கால அரசியல் புள்ளிகளும், 300க்கும் அதிகமான அரச அதிகாரிகளும் கொள்ளையிட்ட பொதுமக்களின் செல்வதை காட்டியுள்ளது.

ரஷ்ய சனாதிபதி பூட்டின் பிரான்ஸ் மற்றும் இத்தாலி எல்லையோரம் உள்ள Monaco என்ற சிறிய நாட்டில் பல சொத்துக்களை பினாமி நிறுவனங்கள் மூலம் கொண்டுள்ளார்.

முன்னாள் பிரித்தானிய பிரதமர் Tony Blair மற்றும் அவரின் மனைவி லண்டன் நகரில் உள்ள அலுவலக சொத்து (office building) ஒன்றை கொள்வனவு செய்தபோது அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் $422,603 வரியை தவிர்த்து உள்ளனர் என்கிறது இந்த அறிக்கை. இவர்கள் இந்த கொள்வனவை வெளிநாட்டு பினாமி நிறுவனம் (offshore firm) மூலம் செய்துள்ளனர்.

Czech நாட்டின் பிரதமர் Andrej Babis என்பவரும் பினாமி நிறுவனம் மூலம் இரண்டு சொத்துக்களை பிரான்சுக்கு தெற்கே $16 மில்லின் பெறுமதிக்கு பெற்றுள்ளார்.

Azerbaijan சனாதிபதி Ilham Aliyev தனது நாட்டை சூறையாடி சுமார் $540 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை ஐரோப்பிய நாடுகளின் ஒளித்து வைத்துள்ளார். இவர் தனது 11 வயது மகனின் பெயரிலும் $45 மில்லியன் பெறுமதியான இரகசிய சொத்தை கொண்டுள்ளார். இவர் 2008ம் ஆண்டு $47 மில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்த லண்டன் சொத்து ஒன்றை 2018ம் ஆண்டு $90 மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளார்.

இங்கே அவமானம் என்னவென்றால் 2018ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட சொத்தை Crown Estate என்ற இரானியின் சொத்து நிறுவனவனமே கொள்வனவு செய்தது. அந்த நிறுவனத்தை செயற்படுத்துவது பிரித்தானியாவின் Treasury.

வறுமையான அரபு நாடான ஜோர்டானின் King Abdullah அமெரிக்காவின் கலிபோனியா நகரான Malibu மற்றும் வெள்ளை மாளிகை உள்ள Washington DC பகுதியிலும் ஆடம்பர வீடுகளை கொண்டுள்ளார். Malibu வீடு $68 மில்லியன்பெறுமதியானது. இவர் பிரித்தானியாவிலும் இரகசிய சொத்துக்களை கொண்டுள்ளார். இவர் 1999ம் ஆண்டு பதவிக்கு வந்தது முதல் குறைந்தது 15 வீடுகளை பினாமி நிறுவனங்கள் மூலம் மேற்கே கொள்வனவு செய்துள்ளார்.

Kenya சனாதிபதி Uhuru Kenyatta வும் அவரின் குடுப்பதவர் 6 பேரும் 11 பினாமி நிறுவனங்கள் மூலம் சொத்துக்களை பெற்றுள்ளனர். அதில் ஒரு நிறுவனம் $30 மில்லியன் பெறுமதியான சொத்தை கொண்டுள்ளது.

தற்போதைய Ukraine சனாதிபதி Zelensky தன்னிடம் இருந்த பினாமி நிறுவனம் மூலமான சொத்தை தேர்தலில் வெல்வதற்கு 1 மாததத்துக்கு முன் Serhiy Shefir என்ற தனது நண்பர் ஒருவருக்கு மாற்றி உள்ளார்.

Morocco நாட்டின் இளவரசி Lalla Hasnaa அரச பணத்தில் $11 மில்லியன் பெறுமதியான சொத்து ஒன்றை பினாமி நிறுவனம் மூலம் லண்டன் நகரில் உள்ள Kensington Palace பகுதியில் கொள்வனவு செய்துள்ளார்.

துருக்கியின் செல்வந்தர் Erman Ilicak கட்டுப்பாடில் உள்ள Covar Trading Ltd என்ற நிறுவனம் 2014ம் ஆண்டு பினாமி நிறுவனத்தின் மூலம் $105.5 மில்லியன் வருமானத்தை பெற்றுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் பின்னர் extraordinary expenses என்ற பெயரில் $105.5 மில்லியனை donation செய்துள்ளது. இவரின் Ronesans Holding என்ற நிறுவனமே துருக்கியின் புதிய 1,150 அறைகள் கொண்ட சனாதிபதி மாளிகையை கட்டி இருந்தது.

பாகிஸ்தான், நெதர்லாந்து, பிரேசில் ஆகியன நாடுகளின் நிதி மந்திரிகளும், முன்னாள் IMF தலைவர் Dominique Strauss-Kahn ஆகியோரும் சொத்துக்களை ஒளித்து வைத்துள்ளனர். இந்திய cricket வீரர் Sachin Tendulkarக்கும் பினாமி மூல சொத்துக்கள் உண்டு.