PHP குறைபாட்டால் முடக்கப்படும் இணைய பக்கங்கள் 

PHP குறைபாட்டால் முடக்கப்படும் இணைய பக்கங்கள் 

PHP (Hypertext Preprocessor) என்ற programming language இணைய பக்கங்களை அமைக்க பரவலாக பயன்படுத்தப்படும் software களில் ஒன்று. உலகின் 70% இணையங்கள் PHP யை பயன்படுத்துகின்றன. WordPress, Drupal, Joomla, Magento போன்ற இணைய தயாரிப்பு tool களும் PHP யை அதிகம் பயன்படுத்துகின்றன.

அண்மையில் இதில் அறியப்பட்ட சில குறைபாடுகள் (flaws) இதை கொண்ட இணையங்களை இலகுவில் தாக்க வழி செய்யலாம் என்பதால் அரச, தனியார் இணையங்கள் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக மூடப்படுகின்றன.

Finland, Netherland உட்பட பல ஐரோப்பிய அரச இணையங்கள் இவ்வாறு பாதுகாப்பு கருதி முடக்கப்பட்டு உள்ளன.

இந்த குறைபாடுகளை அடைக்க PHP குழு புதன்கிழமை fix ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த fix ஐ ஒவ்வொரு இணையமும் தனியாக தமது இணையங்களில் உள்ளடக்க வேண்டும். இதற்கு சில காலம் தேவை.

முறைப்படி ஒரு இணையத்தின் admin தன்னிடம் உள்ள user ID மற்றும் password களை பயன்படுத்தி login செய்தே இணைய வேலைகளை செய்வார். ஆனால் மேற்படி வழு login செய்யாத ஒருவரால் இணையத்தை மாற்றி அமைக்க, தரவுகளை திருட, இணையத்தை தன் வசப்படுத்த வழி செய்கிறது.