PwC கணக்கியல் நிறுவனத்தை கைவிடும் சீன நிறுவனங்கள்

PwC கணக்கியல் நிறுவனத்தை கைவிடும் சீன நிறுவனங்கள்

பிரித்தானியாவின் லண்டன் நகரை தளமாக கொண்ட PricewaterhouseCoopers International Limited (pwc) என்ற உலகின் மிக பெரிய கணக்கியல் ஆய்வு நிறுவனத்தை (auditing company) பல சீன நிறுவனங்கள் கைவிட்டு வருகின்றன.

சீனாவின் பல பெரிய நிறுவனங்களுக்கு கணக்காய்வு போன்ற சேவைகளை pwc செய்து வந்திருந்தது. ஆனால் சீனாவின் Evergrande என்ற வீடு கட்டுமான நிறுவனம் பல ஆண்டுகளாக பெரும் கணக்கியல் குளறுபடிகள் செய்திருந்தாலும் அந்த நிறுவனத்தை audit செய்த pwc அந்த குளறுபடிகளை முறைப்படி அடையாளம்கண்டு ஆவணப்படுத்தவில்லை.

சுமார் $300 பில்லியன் கடனில் இருந்த Evergrande நிறுவனம் தனது வருமானத்தை $79.3 பில்லியனால் பொய்யாக அதிகரித்து பதிவு செய்ததையும், $14 பில்லியன் இலாபம் அடைந்தது என்று பொய்யாக [பதிவு செய்ததையும் pwc சீன அரசுக்கு அறிவித்து இருக்கவில்லை. இதனால் pwc தற்போது சீன அரசால் கடுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே சீனாவின் China Taiping Insurance Holding Co., China Merchants Bank, China Railway Group, China Electronics Huada Technology Co., People’s Insurance of China Ltd., Sunac China Holding Ltd., Shimao Group Holdings Ltd., Sino-Ocean Group Holding Ltd., Agile Group Holdings Ltd. போன்ற பெரிய நிறுவனங்கள் pwc யை கைவிட்டு வேறு கணக்காய்வு நிறுவனங்களை சேவைக்கு அமர்த்தி உள்ளன.

இதனால் pwc பெருமளவு வருமானத்தை இழக்க உள்ளது. மொத்தம் 157 நாடுகளில் உள்ள 742 நகரங்களில் வர்த்தகம் செய்யும் pwc நிறுவனத்தின் மதிப்பு தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.