Reform UK கட்சிக்கு 75% நன்கொடை வழங்கிய Delo, ரம்ப் மன்னித்தவர்

Reform UK கட்சிக்கு 75% நன்கொடை வழங்கிய Delo, ரம்ப் மன்னித்தவர்

குடிவரவாளர் மீது வெறுப்பையும், கடும்போக்கு கொள்கைகளையும் கொண்ட பிரித்தானியாவின் Reform UK என்ற கட்சிக்கு கடந்த காலாண்டில் 75% நன்கொடையை Ben Delo என்ற தனிநபர் வழங்கியுள்ளார். 

அந்த காலாண்டில் Reform UK கட்சிக்கு கிடைத்த மொத்த நன்கொடை 5.3 மில்லியன் பௌண்ட்ஸ். அதில் 4 மில்லியன் பௌண்ட்ஸ் நன்கொடை Ben Delo விடம் இருந்து கிடைத்துள்ளது.

BitMEX என்ற நிறுவனம் மூலம் crypto currency வர்த்தகத்தில் ஈடுபட்ட Ben Delo 2022ம் ஆண்டு அமெரிக்காவில் வங்கி விதிகளை மீறியமை காரணமாக சிறை சென்றவர். பின்னர் அமெரிக்க சனாதிபதி ரம்ப் இவருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார்.

பிரித்தானியாவில் பிறந்து, தாய்லாந்தில் இருந்து crypto currency வர்த்தகத்தில் ஈடுபடும் Christopher Harborne 2024ம் ஆண்டு Reform UK கட்சிக்கு 5 மில்லியன் பௌண்ட்ஸ் நன்கொடை வழங்கி இருந்தார்.