Roman Telescope, நாசா இன்று ஏவிய நவீன தொலை நோக்கி 

Roman Telescope, நாசா இன்று ஏவிய நவீன தொலை நோக்கி 

அமெரிக்காவின் நாசா (NASA) இன்று ஞாயிறு Roman Telescope என்ற விண்வெளியை கண்காணிக்கும், படம் பிடிக்கும் நவீன தொலைநோக்கியை ஏவி உள்ளது. Nancy Grace Roman என்பவரின் பெயரை கொண்ட Roman Telescope முன்னர் ஏவப்பட்ட Hubble Telescope கிலும் 100 மடங்கு அதிக பார்வை திறனை (field of vision) கொண்டது.

இன்று ஏவப்பட்ட Roman பூமிக்கு மேலே 1 மில்லியன் மைல் உயரத்தில் நிலை கொண்டு எமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் விண்வெளியை படம் பிடிக்கும்.

இது 5 முதல் 10 ஆண்டுகள் அங்கே நிலைகொண்டு dark energy, dark matter ஆகியவற்றையும் ஆராயும்.

1990ம் ஆண்டு ஏவப்பட்ட Hubble தொலைநோக்கி பூமிக்கு மேலே 300 மைல் உயரத்தில் நிலைகொண்டு விண்வெளியை படம் பிடிக்கிறது.

2021ம் ஆண்டு ஏவப்பட்ட James Webb தொலைநோக்கி 1 மில்லியன் மைல் உயரத்தில் நிலை கொண்டாலும் இதன் பார்வை திறன் Nancy அளவுக்கு தரமானது அல்ல.