SAS விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது

SAS விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது

SAS என்று பொதுவாக அழைக்கப்படும் Scandinavian Airlines System Denmark-Norway-Sweden விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது. 1946ம் ஆண்டு ஆரம்பித்த இந்த விமான சேவை பல காரணங்களால் அழிந்துள்ளது.

தனது செலவுகளை கட்டுப்படுத்தாமை, கரோனா நோயின் பரவல், யுக்கிறேன் யுத்தத்தால் ரஷ்யா மேலால் பறந்து ஆசியாவை அடைய முடியாமை ஆகியன இதன் அழிவுக்கான சில காரணங்கள் ஆகும்.

2020ம் ஆண்டில் இதனிடம் 160 விமானங்கள் வரை இருந்துள்ளன. 2018ம் ஆண்டில் இது 2,041 மில்லியன் krona இலாபம் அடைந்திருந்தது.  ஆனால் 2020ம் ஆண்டு இது 10,151 மில்லியன் krona நட்டத்தை அடைந்தது.

மேற்படி செய்தியால் இன்று புதன் இந்த விமான சேவையின் பங்கு சந்தை பங்கு 95% பெறுமதியை இழந்துள்ளது.

இந்த விமான சேவையை Castlelake முதலீட்டு நிறுவனம் (32%), Air France – KLM (20%), Lind Invest (8.6%), Danish அரசு (26%) ஆகியன தனியார் நிறுவனம் ஆக்குகின்றன.

SAS $475 மில்லியன் உதவியை உடனடியாக பெறும். அத்துடன் மேலும் $700 மில்லியன் கடன் வசதியையும் SAS பெறுகிறது.