Snowdenனை பாதுகாத்த இலங்கையர்க்கு கனடா புகலிடம்

Snowdenனை பாதுகாத்த இலங்கையர்க்கு கனடா புகலிடம்

2013ம் ஆண்டு அமெரிக்காவின் Edward Snowden என்பருக்கு தமது Hong Kong வதிவிடத்தில் பாதுகாப்பு வழங்கிய இலங்கையருக்கு கனடா அகதி உரிமை வழங்கி உள்ளது. அதனால் இரண்டு பிள்ளைகளை கொண்ட அக்குடும்பம் செவ்வாய்க்கிழமை Toronto நகரை அடைந்து. ஆனாலும் இவர்கள் Montreal நகரிலேயே குடியமவர்.

Supun Thilina Kellapatha, Nadeeka Dilrushi Nonis ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு ஹாங் காங் நகரில் இருந்த காலத்தில் அமெரிக்காவின் பிடியில் இருந்து தப்ப முனைந்த Snowdenனுக்கு தங்க இடம் வழங்கி உள்ளனர். Snowden அவர்களுடன் 3 தினங்கள் தங்கியிருந்தார். அப்போது இலங்கையர் ஹாங் காங் நகரில் அகதி நிலைக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பம் 2017ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டு இருந்தது.

இந்த குடும்பத்துக்கு கனடா அகதி நிலை வழங்கியது தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என்று Snowden கூறியுள்ளார். அமெரிக்கரான Snowden அமெரிக்க அமெரிக்க National Security Agency திணைக்களத்தின் இரகசியங்களை கசியவிடார் என்ற குற்றத்துக்காக தற்போதும் தேடப்படுபடுகிறார்.

இந்த குடும்பம் கனடிய குடியுரிமை பெற்றாலும், இவர்கள் அமெரிக்காவுக்கு கனடியர்களாக செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியே. அவ்வாறு சென்றால் அமெரிக்கா இவர்களை கைது செய்யுமா?