SONYயை உலுக்கிய வடகொரியா

TheInterview

SONY நிறுவனம் அண்மைக்காலங்களில் Hollywood திரைப்பட தயாரிப்பில் இறங்கியிருந்தது. 1989 ஆண்டு முதல் SONY பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நாடகங்களையும் வேறு பல நிருவனங்களுடன் இணைந்து தயாரித்து இருந்தது. SONY அண்மையில் The Interview என்ற ஒரு நகைச்சுவை படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் வரும் நத்தார் தினத்தன்று திரையிடப்பட்டு இருந்தது.
.

இந்த படத்தின் கதைப்படி வெளிநாடவர் இருவர் பத்திரிகையார் உருவில் வடகொரிய சென்று, அந்நாட்டு தலைவர் Kim Jong-Un உடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அச்சந்திப்பின் போது அவரை கொலை செய்வர். இந்த கதையால் ஆத்திரம் அடைந்தது வடகொரியா. SONY நிறுவனத்துக்கு எதிராக சதி வேலைகளில் இறங்கியது.
.
SONY நிறுவனத்தின் கணனிகள் வடகொரிய hackers களால் தாக்கப்பட்டு, பலரின் emailகள் திருடி பகிரங்கப்படுத்தப்பட்டது. பல SONY அதிகாரிகள் மற்றும் பங்காளர்களின் இனவாத emailகள் உலகம் அறிய வைத்தது. அடுத்தவருடம் வெளியிடப்பட இருந்த வேறு சில திரைப்படங்களின் கதைகள், வசனங்கள், பட துண்டங்கள் எல்லாம் பகிரங்கப்படுத்தப்பட்டது. அமெரிக்காவின் FBI யும் இந்த தாக்குதல் வடகொரியாவில் இருந்தே செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
.

எல்லாவற்றுக்கும் மேலாக, The Interview படம் வரும் நத்தார் அன்று வெளியிடப்பட்டால், அத்திரையரங்குகளை 9/11 பாணியில் தாக்குவோம் என்றும் மிரட்டப்பட்டு இருந்தது. இதனால் மிரண்ட SONY 25ம் திகதி The Interview படம் வெளிவராது என்றுள்ளது.
.