SpaceX நிறுவனத்தின் Starship கலம் ஏவலின் பின் வெடித்தது

SpaceX நிறுவனத்தின் Starship கலம் ஏவலின் பின் வெடித்தது

Elon Musk என்பவரின் உரிமை கொண்ட SpaceX என்ற விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்று வியாழன் ஏவிய Starship என்ற விண் கலமும் அதை காவிய ஏவுகணையும் ஏவி 40 செகண்ட் நேரத்தில் வெடித்து சிதறியது.

விண்வெளி வீரர்கள் எவரையும் கொண்டிராத இந்த கலம் Texas மாநிலத்தில் உள்ள SpaceX தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இது ஒரு பரிசோதனை ஏவல் முயற்சியே.

உலகம் எங்கும் இதுவரை ஏவப்பட்ட கலங்களில் இது மிக அதிக உந்து சக்தியை கொண்டிருந்தது. இந்த கலம் பின்னர் மனிதரை செவ்வாய் கிரகத்துக்கு எடுத்து செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்டது.

கலம், ஏவுகணை ஆகியவற்றின் மொத்த உயரம் 119 மீட்டர் (394 அடி), விட்டம் 9 மீட்டர், எடை 5,000 தோன் (35,000 இறாத்தல்).

மேலும் 50 முதல் 100 ஆண்டுகளில் இந்த கலத்தின் உதவியுடன் 1 மில்லியன் மக்களை கொண்ட நகரம் ஒன்றை செவ்வாயில் அமைக்க SpaceX கனவு கொண்டிருந்தது.