இன்று வெள்ளிக்கிழமை முதல் இலான் மஸ்க்கின் SpaceX நிறுவனத்தின் பங்குச்சந்தை பங்கு அமெரிக்காவின் NASDAQ பங்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
IPO (Initial Public Offering) கொள்வனவாளருக்கு மட்டும் 556 மில்லியன் பங்குகளை, பங்கு ஒன்று $135 ஆக விற்பனை செய்து $75 பில்லியனை SpaceX பெற்றுள்ளதும் (556 மில்லியன் பங்குகள் X $135/பங்கு = $75 பில்லியன்).
பங்கு சந்தை வரலாற்றில் இதுவே மிக பெரிய தொகையாகும். இதற்கு முன் சவுதியின் Aramco நிறுவனம் 2019ம் ஆண்டு $30 பில்லியனை IPO மூலம் பெற்று இருந்தது.
மேற்படி கணிப்பின்படி SpaceX நிறுவனத்தின் மொத்த பங்கு சந்தை பெறுமதி $1.77 டிரில்லியன் ஆகும்.
SpaceX நிறுவனமே Starlink என்ற செய்மதி மூலமான இணைய சேவையை வழங்கி வருகிறது.
