சுமார் 130 ஆண்டுகளாக இலங்கையில் இயங்கி வந்த பிரித்தானியாவின் Standard Chartered வங்கி தனது இலங்கை தனியார் சேவையை (retail banking) நிறுத்துகிறது. Standard Chartered வங்கியின் இலங்கை தனியார் சேவை பிரிவை இலங்கையின் DFCC வங்கி கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது.
நவம்பர் மாதம் 12ம் திகதி அறிவிக்கப்பட்ட இந்த இணக்கப்படி இந்த கொள்வனவுக்கு DFCC வங்கி 3.7 பில்லியன் இலங்கை ரூபாய்களை செலவிடுகிறது.
Standard Chartered இலங்கை பிரிவின் தனியார் வைப்பு கணக்குகள், கடன் கணக்குகள், கடன் அட்டைகள், SME சேவைகள் ஆகியன DFCC வங்கிக்கு மாற்றப்படும்.
Standard Chartered ஊழியர்களும் அதேவகை பதவிகளை DFCC வங்கியில் பெறுவார்கள்.
1955ம் ஆண்டு முதல் இயங்கி வரும் DFCC வங்கிக்கு இலங்கையில் 133 கிளைகளும், சுமார் 6,000 ATM நிலையங்களும் உள்ளன.
அண்மையில் பிரித்தானியாவின் HSBC வங்கியும் இலங்கையில் இருந்து வெளியேறி இருந்தது.
