இந்தியா தஜிகிஸ்தான் (Tajikistan) என்ற மத்திய ஆசிய நாட்டில் கொண்டிருந்த Ayni என்ற இடத்து விமானப்படை தளத்தை கைவிட்டுள்ளது.
சோவியத் முறிந்த காலத்தில் அப்போது கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்த தளத்தை இந்தியா தனது சொந்த முதலில் நவீனப்படுத்தி இந்திய விமானப்படை தளமாக பயன்படுத்தியது. இன்றுவரை இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரே இந்திய படைத்தளம் இதுவாகும்.
2002ம் ஆண்டு இந்தியாவும், தஜிகிஸ்தானும் செய்துகொண்ட ஒப்பந்தம் 2022ம் ஆண்டு முடிவடைந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கான உரிமை நீடிக்கப்படவில்லை. சீனாவும், ரஷ்யாவும் தஜிகிஸ்தானுக்கு வழங்கிய அழுத்தங்களே தளத்தை நீடிக்க மறுத்தமைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த தளம் ஒரு சிறிய தளம் என்றாலும், பாகிஸ்தானையும், சீனாவையும் வேவுபார்க்க இந்த தளம் சிறந்ததாக இருந்தது.
அதேவேளை சீனா சத்தம் இன்றி தனது தளம் ஒன்றை தஜிகிஸ்தானில் அமைப்பதாக கூறப்படுகிறது.
