TATA நிறுவனத்துள் பெரும் அதிகார மோதல் 

TATA நிறுவனத்துள் பெரும் அதிகார மோதல் 

இந்தியாவின் 158 ஆண்டுகள் பழமைவாய்ந்த நிறுவனமான TATA நிறுவனத்துள் மீண்டும் பெரும் அதிகார போட்டி ஆரம்பித்துள்ளது. 

2027ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் Tata Sons நிறுவனத்தின் Chairman பதவியை கைவிட இருந்த நடராஜன் சந்திரசேகரன் Tata Sons சபையின் விருப்பத்துக்கு இணங்க அந்த முடிவை கைவிட்டு மூன்றாம் தடவையாக மேலும் 5 ஆண்டுகள் Tata Sons நிறுவனத்தின் Chairman ஆக பதவி வகிக்க இணங்கி இருந்தார்.

ஆனால் Tata Sons நிறுவனத்தின் 66% உரிமை கொண்ட தாய் நிறுவனமான Tata Trusts நடராஜனை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் Tata Sons தீர்மானத்தை தடுத்து வருகிறது. தாய் நிறுவனம் Noel Tata வின் (Ratan Tata வின் half-brother) கையில் உள்ளது.

Tata வின் நீண்ட கால தலைவராக இருந்த Ratan Tata வே நடராஜனை Chairman பதிவில் அமர்த்தியிருந்தார். Ratan Tata 2024ம் ஆண்டு மறைந்திருந்தார்.

நடராஜன் அண்மையில் Air India விமான சேவையை கொள்வனவு செய்ததை Noel சாடி வருகிறார். Air India பல பில்லியன் இழப்பில் இயங்குகிறது.

TCS என்ற தொழில்நுட்ப நிறுவனம், Jaguar வாகன நிறுவனம், Land Rover வாகன நிறுவனம், Tetley தேயிலை நிறுவனம் எல்லாம் Tata நிறுவனத்துக்குரியவை.

1987ம் ஆண்டு Tata Group பில் இணைந்த நடராஜன் அந்த நிறுவனத்திலேயே படிப்படியாக வளர்ந்தவர்.

2016ம் ஆண்டிலும் இவ்வகை உள் நிறுவன மோதல் Cyrus Mistry என்ற அக்கால Chairman ஐ வீட்டுக்கு அனுப்பி இருந்தது.