Texas வெள்ள மரண தொகை 104 ஆகியது, 27 பேர் தொலைவு 

Texas வெள்ள மரண தொகை 104 ஆகியது, 27 பேர் தொலைவு 

அமெரிக்க Texas மாநிலத்து Guadalupe ஆற்று பெருக்கெடுப்புக்கு பலியானோர் தொகை 104 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொலைந்து உள்ளோர் தொகை 27 ஆக உள்ளது.

Kerr County பகுதியில் மட்டும் 84 பேர் பலியாகியும், 11 பேர் தொலைந்தும் உள்ளனர். அதில் 28 பேர் இளையோர்.

தரமான வானிலை அவதானிப்பு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ள நாட்டில் இவ்வகை அழிவை தவிர்க்க முடியாமை பல கேள்விகளை தோற்றுவித்துள்ளன.

அண்மையில் சனாதிபதி ரம்ப் FEMA போன்ற பல திணைக்களகங்களுக்கான நிதி ஒதுக்கீடை குறைத்து இருந்தார். அதுவும் பாதகமாக அமைந்திருக்கலாம்.