Truss ஆட்சியில் பாரிய வீழ்ச்சி அடையும் பவுண்ட்

Truss ஆட்சியில் பாரிய வீழ்ச்சி அடையும் பவுண்ட்

லிஸ் ட்ரஸ் (Liz Truss) அண்மையில் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அங்கு புதிய பொருளாதார மற்றும் வரி கொள்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய வரி கொள்கைகளால் மிரண்ட சந்தைகள் பிரித்தானிய நாணயமான பவுண்டடின் பெறுமதியை வீழ்ச்சி அடைய செய்துள்ளது.

இன்று பிரித்தானிய பவுண்ட் ஒன்றுக்கு ஆக குறைந்த பெறுமதியான $1.09049 மட்டுமே கிடைத்திருந்தது. 1980களில் பவுண்ட் ஒன்றுக்கு சுமார் $2.40 கிடைத்து இருந்தது.

ட்ரஸ் ஆட்சியில் வருமான வரிகள் குறைக்கப்படுகின்றன, வீட்டு கொள்வனவு வரி குறைக்கப்படுகிறது, அத்துடன் திட்டமிடப்பட்டு இருந்த வரி அதிகரிப்பும் கைவிடப்பட்டு உள்ளது. தற்போது 20% ஆக உள்ள அடைப்படி வரி 19% ஆக குறைக்கப்படுகிறது. அதிக வருமானம் கொண்டோருக்கான தற்போதைய 45% வரி, 2023ம் ஆண்டு முதல் 40% ஆகி குறைகிறது.

அதேவேளை யுகிரைன் யுத்தத்தால் அதிகரித்துவரும் எரிபொருள் விலை பழுவை கட்டுப்படுத்த ட்ரஸ் அரசு $166 பில்லியன் செலவிட உள்ளது. இதற்கான பணத்தை கடன் பெறவுள்ளதாக அரசு கூறியுள்ளது.

பிரித்தானியாவின் நுகர்வோர் பணவீக்கம் 10% வரை இருக்கையில் அரசு மேலும் கடன் பெறுவது நல்லதல்ல என்று கருதப்படுகிறது.