Vance, Caine எதிர்பால் ரம்ப் ஈரான் தாக்குதலை இடை நிறுத்தினார் 

Vance, Caine எதிர்பால் ரம்ப் ஈரான் தாக்குதலை இடை நிறுத்தினார் 

கடந்த இரண்டு கிழமைகளாக ஈரான் மீது அமெரிக்கா தினசரி செய்து வந்த தாக்குதல்களை உதவி சனாதிபதி JD Vance, அமெரிக்க முப்படை தளபதி Dan Caine ஆகியோர் தொடுத்த எதிர்ப்புகள் காரணமாக சனாதிபதி ரம்ப் இடை நிறுத்தி உள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட MoU என்ற புரிந்துணர்வு யுத்த நிறுத்தத்தை முறித்து ரம்ப் 13 இரவுகளாக ஈரான் அடிபணியும் என்ற கணிப்பில் ஈரான் மீது தாக்குதல்களை செய்து வந்தார்.

ஆனால் ஈரான் தொடர்ந்தும் திருப்பி தாக்கி வந்தது. இந்த தாக்குதல்களுக்கு ஜோர்டானில் 2 அமெரிக்க படையினரும், ஈராக்கில் 1 அமெரிக்க படை உறுப்பினரும் பலியாகி இருந்தனர். அத்துடன் 100 படையினர் வரை காயமடைந்தும் உள்ளனர். ஜோர்டான், குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்களை தொடர்ந்தது.

அதேநேரம் அமெரிக்க ஏவுகணைகளின் கையிருப்பு தொகையும் வேகமாக குறைந்து வந்துள்ளது. இவற்றை விரும்பாத Vance, Caine இருவரும் வெள்ளிக்கிழமை அமர்வு ஒன்றில் எதிர்ப்பை முன்வைத்தால் ரம்ப் ஈரான் மீதான தினசரி தாக்குதல்களை சுயமாக நிறுத்தி உள்ளார்.

அதனால் ரம்ப் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் விலை உயர்ந்த ஏவுகணைகளினதும், அவற்றை ஏவும் ஏவிகளினதும் கையிருப்பு வரலாற்றில் என்றுமில்லாத அளவில் தற்போது குறைந்து உள்ளது.