இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனர் நிலமாகிய West Bank பகுதியில் இஸ்ரேலிய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு பிரித்தானியா தடை விதிக்கவுள்ளது.
இந்த அறிவிப்பை பிரித்தானிய வெளியுறவு செயலாளர் Ed Miliband இன்று செவ்வாய் பிற்பகல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என்று தெரியவருகிறது.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் Andy Burnham இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரண்டு நாடுகளும் (two-state solution) அருகருகே இருப்பதன் அவசியத்தை வற்புறுத்தி உள்ளார்.
அண்மையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள West Bank பகுதியில் E1 குடியிருப்பு என்ற புதிய குடியிருப்பை அறிவித்து இருந்தது. அதை பிரித்தானியா உட்பட பல மேற்கு நாடுகள் கண்டித்து இருந்தன.
புதிய 1,200 வீடுகள் கொண்ட E1 திட்டம் two-state திட்டத்தை முறியடிக்கும் நோக்கம் கொண்டது.
