West Bank யூத வன்முறையாளர் மீது ஐரோப்பா தடை

West Bank யூத வன்முறையாளர் மீது ஐரோப்பா தடை

பாலத்தீன West Bank பகுதியில் ஆக்கிரமித்து உள்ள யூத வன்முறையாளர் மீது தடைகளை நடைமுறை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் இன்று திங்கள் இணங்கி உள்ளது.

மொத்தம் 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் கொண்ட, ரம்ப் மற்றும் இஸ்ரேல் ஆதரவு கொண்ட ஹங்கேரியின் (Hungary) பிரதமர் Viktor Orban மேற்படி தடை முயற்சியை இதுவரை தடுத்து வந்திருந்தார்.

அண்மையில் Orban ஆட்சியை இழக்க, ஹங்கேரியின் புதிய பிரதமர் ஏனைய 26 நாடுகளுடன் இணங்கி, வன்முறை செய்யும் யூதர்கள் மீது தடையை நடைமுறை செய்ய முன்வந்துள்ளார்.

இந்த வன்முறை யூதர்கள் பலஸ்தீனரின் வீடுகள், வாகனங்கள் போன்ற உடமைகளை எரிப்பது, பண்ணைகளை கொல்வது, ஒலிவ் போன்ற பயிர்களை அழிப்பது போன்ற வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்.