World Cup 2022 ஞாயிறு கட்டாரில் ஆரம்பம்

World Cup 2022 ஞாயிறு கட்டாரில் ஆரம்பம்

World Cup 2022 என்ற உதைபந்தாட்ட போட்டி ஞாயிறு கட்டாரில் (Qatar) ஆரம்பமாக உள்ளது. சனிக்கிழமை இரவே கட்டாரின் தலைநகர் டோகாவில் (Doha) கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன.

முதல் ஆட்டம் Group A யுள் அடங்கும் கட்டார் அணிக்கும், எக்குவடோர் (Ecuador) அணிக்கும் இடையில் கட்டார் நேரப்படி 20ம் திகதி ஞாயிறு மாலை 7:00 மணிக்கு Al Bayt மைதானத்தில் இடம்பெறும்.

திங்கள் 21ம் திகதி மாலை 4:00 மணிக்கு Group B யுள் அடங்கும் இங்கிலாந்து அணியும், ஈரான் அணியும் மோதும். திங்கள் மாலை 7:00 மணிக்கு Group A யுள் அடங்கும் Senegal அணியும் நெதர்லாந்து அணியும் மோதும்.

ஒவ்வொன்றிலும் 4 நாடுகளை கொண்ட Group A முதல் H வரையான 8 குழுக்களில் மொத்தம் 32 நாடுகளின் அணிகள் இம்முறை மோதிக்கொள்ளும். டிசம்பர் 17ம் திகதி 3ம் வெற்றி அணிக்கான போட்டியும், டிசம்பர் மாதம் 18ம் திகதி 1ம் மற்றும் 2ம் வெற்றி அணிகளுக்கான போட்டி இடம்பெறும்.

அதேவேளை கட்டார் World Cup போட்டிகளை தவிர்க்கவேண்டும் என்று கூறும் மேற்கு நாட்டவரை வன்மையாக சாடியுள்ளார் FIFA தலைவர் Gianni Infantino. அவர் தனது உரையில் “நான் ஒரு ஐரோப்பியன். ஐரோப்பியர் மற்றவர்களுக்கு moral பாடம் கற்பிக்க முன் ஐரோப்பியர் கடந்த 3,000 ஆண்டுகளாக உலகத்து செய்தவற்றுக்கு அடுத்த 3,000 ஆண்டுகளுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று சாடியுள்ளார்.

இஸ்லாமிய நாடான கட்டாரின் World Cup மைதானத்தின் பொது இடங்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை சாடுவோரையும் சாடியுள்ளார் Gianni Infantino. பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், Scotland ஆகிய இடங்களிலும் இவ்வாறு பொது இட மதுபான தடைகள் உள்ளன. அவ்வாறு இருக்க கட்டாரை மட்டும் சாடுவது “hypocrisy’ என்று கூறியுள்ளார் FIFA தலைவர்.