Xiaomi யின் $725 மில்லியனை இந்தியா முடக்கம்

Xiaomi யின் $725 மில்லியனை இந்தியா முடக்கம்

சீனாவின் சியாமி (XiaoMi) என்ற தொலைபேசி தயாரிக்கும் நிறுவனத்தின் வங்கிகளில் இருந்த $725 மில்லின் பணத்தை இந்திய அரசு நேற்று சனிக்கிழமை முடக்கி உள்ளது. சியாமி இந்தியாவின் வெளிநாட்டு பணமாற்றில் குளறுபடி செய்துள்ளது என்கிறது. சியாமி அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

மேற்படி பணத்தை Xiaomi Technology India Private Limited அமெரிக்கா உட்பட்ட 3 நிறுவனங்களுக்கு நகர்த்தி உள்ளதாக இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அவ்வாறான royalty செலுத்துமதி சட்டப்படியானது என்கிறது சியாமி.

இந்தியாவில் அதிகம் smartphone களை விற்பனை செய்யும் நிறுவனம் சியாமி. இந்திய smartphone சந்தையின் 24% இதனிடம் உள்ளது. அங்கு இரண்டாம் இடத்தில் உள்ள Samsung 19% சந்தையை கொண்டுள்ளது.

2020ம் ஆண்டில் தாம் இந்தியாவில் 50,000 வேலைவாய்ப்பை உருவாக்கியதாக சியாமி கூறி இருந்தது. அதில் சுமார் 30,000 ஊழியர்கள் தயாரிப்பு வேலைகளை கொண்டிருந்தனர்.