Zhu Rongji, சீன பொருளாதாரத்தின் பிரதானி, 97 வயதில் மரணம் 

Zhu Rongji, சீன பொருளாதாரத்தின் பிரதானி, 97 வயதில் மரணம் 

சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமான சில பிரதானிகளில் ஒருவரான Zhu Rongji இன்று தனது 97ம் வயதில் காலமானார். இவர் 1998 முதல் 2003 வரை சீனாவின் Premier பதவியை வகித்தவர்.

சீனா WTO என்ற உலக வர்த்தக அமைப்பில் இணையவும் இவர் பிரதான காரணி. இதற்காக இவர் சீனாவிலும், அமெரிக்காவிலும் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வென்றவர்.

இவர் அக்காலத்தில் பதவிகளில் இருந்த ஊழல் அதிகாரிகளை வன்மையாக தண்டித்தவர். இவர் ஒரு தடவை “நான் 100 மரண பெட்டிகள் தயாரித்துள்ளேன், அதில் 99 ஊழல் நிறைந்த அதிகாரிகளுக்கு, 1 எனக்கு” என்று கூறினாராம்.

இவர் நட்டத்தில் இயங்கிய அரச திணைக்களங்களை எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீர் செய்திருந்தார்.