மூடியுள்ள மில்லியன் டொலர் வீடுகள்

அமெரிக்கா, கனடா போன்ற நாட்டு பெருநகர்களில் மூடப்பட்டு இருக்கும் மில்லியன் டொலர் பெறுமதியான வீடுகள் தொடர்பில் கனடாவின் The Goble and Mail பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. . டொரோண்டோ (Toronto), வான்கூவர் (Vancouver) போன்ற பெரு நகர்களில் வாழும் மக்கள் கொள்வனவு செய்ய முடியாத அளவில் வீட்டு விலைகள் உயர்த்திருந்தாலும், இந்நகர்களில் பெருமளவு வீடுகள், குறிப்பாக Condo எனப்படும் உயர்மாடி வீடுகள் உரிமையாளர்களால் மூடி வைக்கப்பட்டு உள்ளனவாம். இவ்வாறு மூடியுள்ள வீடுகளின் உரிமையாளர் பலரும் […]

கொழும்பு துறைமுகம் வருகிறது MSC Maya

கொழும்பு துறைமுகத்துக்கு மிக பெரியதோர் வர்த்தக கப்பலான MSC Maya வரவுள்ளது. பனாமாவில் பதிவு செய்யப்பட்ட Maya 20 அடி நீளமான 19,224 கொள்கலன்களை காவக்கூடியது. 2015 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் கட்டப்பட்ட இந்த கப்பல் சுமார் 395 மீட்டர் நீளமானது. இதன் இயந்திரங்கள் 83,780 hp (குதிரைவலு) வலுவை வழங்கக்கூடியன. இந்த மாதம் 16 ஆம் திகதி இது கொழும்பை வந்தடையும். . தற்போது நான்கு கொள்கலன் கப்பல்கள் உலகின் மிகப்பெரிய கப்பல்கள் என்ற இடத்தில் […]

மிஹின் விமானசேவை இவ்வருடத்தில் நிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவில், 2007 ஆம் ஆண்டில், சேவையை ஆரம்பித்திருந்த மிஹின் லங்கா விமான சேவை இந்த வருட இறுதிக்குள் சேவையை முற்றாக நிறுத்தும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் சேவைகளை ஸ்ரீலங்கன் விமானசேவை தொடரும் என்று ஸ்ரீலங்கனின் அதிகாரி அஜித் டயஸ் கூறியுள்ளார். . மிஹின் விமானசேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஊழல், முறைகேடு போன்ற பல காரணங்களால் நட்டத்தில் இயங்கி வந்திருந்தது. மிஹின் சேவை இலங்கை அமைச்சரவையின் அங்கீகாரம் இன்றியே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. […]

இந்திய-பிரான்ஸ் நீர்மூழ்கி தரவுகள் அம்பலத்தில்

பிரான்சின் DCNS என்ற நிறுவனத்தின் உதவியுடன் இந்தியா ஆறு Scorpene வகை நீர்மூழ்கிகளை தயாரிக்க இணங்கியது. இந்திய தன்னிடம் உள்ள சோவியத் காலத்து நீர்மூழ்கிகளுக்கு பதிலாக இந்த புதிய Scorpene வகை நீர்மூழ்கிகளை கடல் படைக்கு வழங்கவிருந்தது. அந்த ஆறில் ஒரு நீர்மூழ்கி சில மாதங்களின் முன் வெள்ளோதிடத்திலும் ஈடுபட்டு உள்ளது. . ஆனால் அந்த நீர்மூழ்கிகளின் முக்கிய தரவுகள் அண்மையில் முன்னாள் ஊழியர் ஒருவரால் பகிரங்கப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த உண்மைகள் தற்போது எல்லோர் கைகளிலும் உள்ளதால், […]