சீனாவுக்கு உளவு செய்த CIA அதிகாரிக்கு 20 ஆண்டுகள்

முன்னாள் CIA (Central Intelligence Agency) அதிகாரியான Kevin Patrick Mallory, வயது 62, என்பவர் சீனாவுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான இரகசியங்களை வழங்கினார் என்ற குற்றம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டது. அவரின் அந்த குற்றத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை 20-வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இவர் சீனா உளவாளியிடம் இருந்து $25,000 பெற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது. . பதவியில் இருந்தபோது Mallory CIA அமைப்பின் பல இரகசிய செயற்பாடுகளில் […]

திடமான முடிவின்றி பிரித்தானியா, மேயும் பதவி விலகலாம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இருந்து விலக பிரித்தானியா எடுத்துக்கொண்ட திடமில்லாத முடிவால் பிரித்தானியாவின் அரசியல் குழம்பி உள்ளது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் முடிவு தொடர்பான அடுத்த வாக்கெடுப்பில் பிரதமர் மே இணக்கப்பாடு ஒன்றை முன்வைக்க முடியாவிட்டால், தான் பதவியில் இருந்து விலக உள்ளதாக தற்போது கூறியுள்ளார். . Brexit தொடர்பாக இன்னோர் வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றில் ஜூன் மாதம் முதல் கிழமை இடம்பெறவுள்ளது. இதுவே மேயின் இறுதி முயற்சியாகும். ஏற்கனவே 3 தடவைகள் மேயின் திட்டங்கள் போதிய […]

உலகின் அதிசெல்வந்தர் வாழும் 15 இடங்கள்

அமெரிக்க டாலர் நாணய கணிப்புப்படி உலகில் தற்போது  சுமார் 1,942 பில்லினியர் உள்ளனர். அதாவது இவர்களிடம் $1,000,000,000 அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்கள் உண்டு. அதில் பெரும் பகுதி நிலையற்ற பங்குசந்தை (stock market) சொத்தாகவும் இருக்கும். . Wealth-X என்ற அமைப்பின் ஆய்வின்படி உலகின் மொத்த பில்லினியர்களில் 79% செல்வந்தர் $6.8 டிரில்லியன் ($6,800 பில்லியன்) சொத்தை கொண்டுள்ளனர். இவர்கள் பின்வரும் 15 இடங்களில் வாழ்கின்றனர். . அமெரிக்காவிலேயே அதி கூடிய பில்லினியர்கள் வாழ்கின்றனர். அங்கு […]

வளைகுடா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள்

கடந்த சில தினங்களாக வளைகுடா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களை செய்வோர் யார் என்று இதுவரை அறியப்படவில்லை. ஆனால் பெரும்பாலான தாக்குதல்கள் சவுதி, மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) ஆகிய இரு நாடுகளின் கட்டமைப்புகள் மீதே இடம்பெற்று உள்ளன. . ஞாயிற்று கிழமை சவுதி அரேபியாவுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்கள் UAE க்கு அருகே நிலைகொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாகின. ஒரு கப்பலில் 3 சுமார் மீட்டர் […]

உங்களை உளவு பார்க்க உதவும் உங்கள் WhatsApp

உங்கள் smartphone களில் உள்ள WhatsApp செயல்பாட்டை பயன்படுத்தி உங்களை உளவு பார்க்கும் வல்லமையை இஸ்ரேலின் NSO என்ற நிறுவனம் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. WhatsApp செயல்பாட்டில் உள்ள குறைபாடு (software flaw) ஒன்றை பயன்படுத்தியே இந்த உளவு பார்த்தல் செயல்படுத்தப்படுகிறது. . WhatsApp உரிமையாளரான Facebook நிறுவனம் Financial Times என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்த செய்தி உண்மை என்று நேற்று திங்கள் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த குறைபாட்டை அடைக்கவும் Facebook முனைகின்றது. . WhatsApp […]

அமெரிக்க பொருட்களுக்கு சீனா வரி அதிகரிப்பு

அமெரிக்கா கடந்த வெள்ளி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $200 பில்லியன் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரியை (tariff) அறவிட தீர்மானம் எடுத்து இருந்தது. சீனாவும் பதிலுக்கு $60 பில்லியன் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு ஜூன் 1 ஆம் திகதி முதல் 10% முதல் 25% வரையான அதிகரித்த இறக்குமதி வரியை அறவிட உள்ளதாக இன்று கூறியுள்ளது. . அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தொடர்ந்தும் உக்கிரம் அடைவதால் இன்று உலக பங்கு சந்தைகள் […]

இந்தியாவுக்கு அமெரிக்காவின் THAAD ஏவுகணைகள்?

அமெரிக்கா தனது Terminal High Altitude Area Defense (THAAD) என்ற ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளது. ஏற்கனவே இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S-400 வகை ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முன்வந்திருந்த நிலையிலேயே அமெரிக்கா S-400 ஏவுகணைகளுக்கு பதிலாக தனது THAAD ஏவுகணைகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. . S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா சில தடைகளை விதித்து வந்திருந்தது. ஆனால் இந்தியா ரஷ்யாவின் S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முனைந்தபோது […]

$200 பில்லியன் சீன இறக்குமதிக்கு 25% இறக்குமதி வரி

அமெரிக்காவின் ரம்ப் அரசு இன்று முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $200 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு புதிய 25% இறக்குமதி வரியை (tariffs) நடைமுறை செய்கிறது.  இன்று முதல் இந்த வரி நடைமுறை செய்யப்படாலும், சீனாவில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு முன் வெளியேறி தற்போது கடலில் பயணிக்கும் கப்பல்களில் உள்ள பொருட்கள் மீது இந்த வரி அறவிடப்படமாட்டாது. இந்த பொருட்கள் அமெரிக்காவை அடைய சுமார் 3 முதல் 4 கிழமைகள் எடுக்கும். . மேற்படி பொருட்களுக்கு முன்னர் […]

தென் ஆபிரிக்காவில் சரியும் மண்டேலாவின் ANC

புதன்கிழமை தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற தேசிய மற்றும் மாநில தேர்தல்களில் மண்டேலா ஆரம்பித்த African National Congress (ANC) என்ற கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு குறைந்து வருவது தெரிந்துள்ளது. சுமார் 72% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மண்டேலா ஆரம்பித்த ANC கட்சிக்கு 57% ஆதரவு மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த 25 வருடகாலத்தில் இதுவே ANC கட்சிக்கு கிடைத்த மிக குறைந்த ஆதரவு ஆகும். . ANC தொடர்ந்தும் ஆட்சியை அமைக்க போதிய ஆசனங்களை வெல்லும் என்றாலும், அதன் […]

சில JCPOA உடன்படிக்கைகளில் இருந்து ஈரான் வெளியேற்றம்

தாம் சில JCPOA என்ற அணுசக்தி உடன்படிக்கைகளில் இருந்து வெளியேறுவதாக ஈரான் இன்று புதன் அறிவித்து உள்ளது. பதிலுக்கு அமெரிக்கா ஈரானின் இரும்பு, உருக்கு, அலுமினியம் ஆகிய ஏற்றுமதிகள் மீதும் புதிய தடைகளை விதித்துள்ளது. . ஒபாமா காலத்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட JCPOA என்ற அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து ரம்ப் அரசு தன்னிசையாக வெளியேறி இருந்தது. ஆனால் ஏனைய நாடுகள் ஈரானை தொடர்ந்து […]

1 20 21 22 23 24 33