இரண்டாம் ரம்ப்-பூட்டின் சந்திப்பை கைவிட்டார் ரம்ப் 

இரண்டாம் ரம்ப்-பூட்டின் சந்திப்பை கைவிட்டார் ரம்ப் 

யூக்கிறேன் யுத்த நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய சனாதிபதி பூட்டினை ஹங்கேரி என்ற நாட்டில் இரண்டாம் தடவையும் நேரடியாக சந்தித்து உரையாடும் முயற்சியை அமெரிக்க சனாதிபதி ரம்ப் கைவிட்டு உள்ளார். அண்மையில் அமெரிக்க மாநிலமான அலாஸ்காவில் இடம்பெற்ற முதலாவது நேரடி சந்திப்பும் பயன் எதையும் வழங்கி இருக்கவில்லை. இரண்டாம் சந்திப்பும் அவ்வாறே அமையும் என்ற கணிப்பு ரம்பை சூழ்ந்திருக்கலாம். அத்துடன் ரம்ப் ரஷ்யாவின் Rosneft, Lukoil ஆகிய இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீதும் தடை விதித்துள்ளார். ஆனாலும் […]

முன்னாள் பிரெஞ்சு சனாதிபதியின் 5 ஆண்டு சிறை ஆரம்பம் 

முன்னாள் பிரெஞ்சு சனாதிபதியின் 5 ஆண்டு சிறை ஆரம்பம் 

2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்சின் சனாதிபதியாக பதவி வகித்த சர்கோஸி (Nicolas Sarkozy) தனது 5 ஆண்டு சிறை தண்டனையை தொடர பாரிஸில் உள்ள La Sante சிறைச்சாலைக்கு செவ்வாய் சென்றுள்ளார். தற்போது 70 வயதான சரோஸ்கி முன்னாள் லிபிய (Libya) தலைவர் கடாபியிடம் இருந்து பல மில்லியன் டாலர்கள் இலஞ்சம் பெற்று தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. சரோஸ்கிக்கு 9 முதல் 12 சதுர மீட்டர் பரப்பளவு […]

பொய் கூறுவது ரம்பா அல்லது மோதியா?

பொய் கூறுவது ரம்பா அல்லது மோதியா?

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை நிறுத்தவுள்ளது என்று இந்திய பிரதமர் மோதி தனக்கு கூறியதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கடந்த புதன்கிழமை கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு மோதி கூறவில்லை என்று இந்தியா ரம்பின் கூற்றை மறுத்து இருந்தது. பின் வியாழன் இந்தியா தனது ரஷ்ய எரிபொருள் கொள்வனவை 1/2 பங்கால் குறைத்து உள்ளது என்று வெள்ளை மாளிகை கூறியது. அதையும் இந்தியா மறுத்தது. ஞாயிறு மீண்டும் ரம்ப் ” I spoke with Prime […]

இந்தியாவில் அலுவலகத்தை ஆரம்பிக்கும் Embraer 

இந்தியாவில் அலுவலகத்தை ஆரம்பிக்கும் Embraer 

பிரேசில் (Brazil) என்ற தென் அமெரிக்க நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான Embraer இந்திய தலைநகர் டில்லியில் தனது கிளை அலுவலகத்தை ஆரம்பித்து உள்ளது. அமெரிக்காவின் Boeing மற்றும் ஐரோப்பாவின் Airbus ஆகிய பயணிகள் விமான தயாரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்து உலகின் 3வது பெரிய நிறுவனம் Embraer. ஆனாலும் இந்தியாவில் Embraer விமானங்கள் தொகை மிக குறைவு. 2005ம் ஆண்டில் முதல் Embraer விமானம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தாலும் இன்று வரை சுமார் 30 விமானங்களே இந்தியாவில் விற்பனை […]

ரம்புடன் முரண்பட்டு பதவி விலகினார் அட்மிரல் Holsey?

ரம்புடன் முரண்பட்டு பதவி விலகினார் அட்மிரல் Holsey?

அமெரிக்க படைகளின் தென் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான Southern Command பிரிவின் கட்டளை அதிகாரி அட்மிரல் Alvin Holsey திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உலக சட்டங்களுக்கு எதிராக ரம்ப் அரசு அட்மிரலின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச கடலில் போதை கடத்தும் வள்ளங்கள் என்று கூறி பல வள்ளங்களை தாக்கி அழித்தமை அட்மிரலின் பதவி விலகலுக்கு காரணமாக அமையலாம். 1988ம் ஆண்டு அமெரிக்க படைகளில் இணைந்த அட்மிரல் Holsey அமெரிக்க படைகளில் 37 ஆண்டுகள் சேவையாற்றி இறுதியில் […]

முரண்பட்டோரை பழிவாங்கும் ரம்ப், Bolton மீதும் வழக்கு 

முரண்பட்டோரை பழிவாங்கும் ரம்ப், Bolton மீதும் வழக்கு 

2016ம் ஆண்டு முதல் முறை சனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட காலத்தில் ரம்ப் ‘I am your voice” என்று மட்டுமே கூறியிருந்தார். ஆனால் 2023ம் ஆண்டு இரண்டாம் தடவை சனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட காலத்தில் ரம்ப் எனக்கு குற்றம் செய்தவர்களுக்கு நான் பழிவாங்குபவர் (retribution) என்று மிரட்டி இருந்தார். அவ்வகையில் பல அமெரிக்க உயர் அதிகாரிகள் தற்போது பழிவாங்கப்பட்டு வருகின்றனர். நேற்று 16ம் திகதி ரம்ப் அரசு John Bolton மீது அரச இரகசியங்களை முறைப்படி கையாளவில்லை […]

வெனிசுஏலாவில் CIA, அறிவித்தார் ரம்ப்

வெனிசுஏலாவில் CIA, அறிவித்தார் ரம்ப்

தென் அமெரிக்க நாடான வெனிசுஏலாவில் (Venezuela) தனது அனுமதியுடன் அமெரிக்காவின் CIA உளவுப்படை இயங்குவதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் புதன்கிழமை கூறியுள்ளார். பொதுவாக இவ்வகை தீர்மானம் அமெரிக்க காங்கிரசின் அனுமதி பெற்றே நடைமுறை செய்யப்படும். ஆனால் காங்கிரசின் Senate, House ஆகிய இரண்டும் ரம்பின் Republican கட்சி பெரும்பான்மையை கொண்டுள்ளதால் இரண்டு சபைகளும் கண்களை மூடி உள்ளன. வெனிசுஏலாவில் இருந்து போதையை ஏற்றிவந்த சில வள்ளங்கள் நடுக்கடலில் வைத்து தாக்கி அழிக்கப்பட்டன என்று அமெரிக்கா கூறினாலும் அவற்றுக்கான […]

உக்கிரம் அடையும் ரம்பின் சீனா மீதான கப்பல் யுத்தம் 

உக்கிரம் அடையும் ரம்பின் சீனா மீதான கப்பல் யுத்தம் 

சீன கப்பல் துறை மீதான அமெரிக்க சனாதிபதி ரம்பின் யுத்தமும் நேற்று செவ்வாய் உக்கிரம் அடைந்துள்ளது. வளர்ச்சி அடைந்த சீன கப்பல் துறையை கட்டுப்படுத்த அமெரிக்கா வரும் சீன தொடர்புடைய கப்பல்களுக்கு ரம்ப் முதலில் மேலதிக கட்டணம் அறவிட்டார். பதிலடியாக செவ்வாய் சீனாவும் அவ்வகை கட்டணத்தை அமெரிக்க தொடர்புடைய கப்பல்களுக்கு அறிவித்துள்ளது. கப்பல் கட்டுமான துறையில் தென் கொரியா ஒரு காலத்தில் முன் இருந்திருந்தாலும் தற்போது சீனா முதலாம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 14ம் இடத்தில் உள்ளது. […]

மடகாஸ்கரில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு?

மடகாஸ்கரில் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு?

இந்து சமுத்திரத்தின் மேற்கே, ஆப்பிரிக்கா கண்ட பக்கம் உள்ள நாடான மடகாஸ்கரில் (Madagascar) இராணுவ ஆட்சி கவிழ்ப்பு நிகழ்வதாக கூறப்படுகிறது. அந்த நாட்டின் சனாதிபதி Andry Rajoelina, வயது 51, தான் பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக Facebook மூலம் கூறினாலும் அவர் பிரெஞ்சு இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அத்துடன் அவர் செப்டம்பர் 25ம் திகதி முதல் சில இராணுவ அதிகாரிகளும், சில அரசியல்வாதிகளும் தன்னை படுகொலை செய்ய முனைவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். புதன் […]

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம் 

இந்தியா மீண்டும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகத்தை அமைக்க முன்வந்துள்ளது. ஆப்கான் தலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சர் Mawlawi Amir Khan Muttaqi இந்தியாவுக்கு பயணம் செய்த வேளையிலேயே இந்தியா இந்த அறிவிப்பை செய்துள்ளது. முன்னர் இந்தியா தலிபானுக்கு எதிரான, அமெரிக்க ஆதரவுடன் ஆட்சியில் இருந்த அரசையே ஆதரித்து வந்தது. ஆனால் அமெரிக்கா 2021ம் ஆண்டு தனது படைகளை திடீரென பின்வாங்க, அமெரிக்க ஆதரவு அரசு கூடவே தப்பி ஓட, தலிபான் ஆட்சியை அமைத்தது. அப்போது […]