International Emergency Economic Powers Act (IEEPA) என்ற 1977ம் ஆண்டு சட்டத்தை பயன்படுத்தி அமெரிக்க சனாதிபதி ரம்ப் கடந்த ஆண்டு நடைமுறை செய்த புதிய இறக்குமதி வரிகள் (tariffs) சட்டத்துக்கு முரணானது என்று அமெரிக்க Supreme Court வெள்ளிக்கிழமை தீர்ப்பு கூறியுள்ளது. மொத்தம் 9 நீதிபதிகளில் 6 நீதிபதிகள் ரம்பின் வரிகளுக்கு எதிராக தீர்ப்பு கூறியமையால் கடும் விசனம் கொண்டுள்ளார் ரம்ப். குறிப்பாக ரம்பால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளான Gorsuch, Barrett ஆகிய இருவரும் ரம்புக்கு எதிராக தீர்ப்பு […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் மிரட்டல்களுக்கு உள்ளான பிரித்தானிய, பிரெஞ்சு, கனடிய தலைவர்கள் சீனா பறந்ததுபோல் வரும் புதன்கிழமை மேர்ஸ் (Merz) என்ற ஜேர்மன் நாட்டின் தலைவரும் சீனா பறக்கிறார். இவரை சீன சனாதிபதி சீ, Premier Li Qiang ஆகியோர் வரவேற்பர். முதலில் சீன தலைநகர் பெய்ஜிங் செல்லும் Merz பின்னர் Hangzhou என்ற தென்கிழக்கு பகுதி நகருக்கும் செல்வார். 2025ம் ஆண்டு ஜேர்மனிக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்தின் பெறுமதி $297 ஆக இருந்துள்ளது. 20025ம் ஆண்டில் சீனாவே ஜேர்மனியின் முதலாவது […]
பெப்ரவரி மாதம் 25ம் திகதி முதல் பிரித்தானியாவின் குடியுரிமையையும் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையையும் கொண்டவர்களுக்கு (dual-citizen) புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. இவர்களின் இரண்டாம் குடியுரிமை இலங்கை போன்ற பிரித்தானியாவுக்கான விசா தேவையான நாடுகளின் குடியுரிமையாக இருப்பின் இவர்கள் பிரித்தானிய கடவுச்சீட்டு அல்லது பிரித்தானியாவின் certification of entitlement என்ற புதிய ஆவணத்தை கொண்டிருந்தால் மட்டுமே இவர்கள் பிரித்தானியா திரும்ப முடியும். பிரித்தானியாவில் கடவுச்சீட்டு ஒன்றுக்கான கட்டணம் 100 பவுண்ட்ஸ் ஆக இருக்கையில், புதிய certification of […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஈரான் அருகே பெருமளவு ஆயுதங்களை குவித்து வருகிறார். இந்த குவிப்பு வெறும் மிரட்டலா, அல்லது ஈரான் மீதான தாக்குதலுக்கான தயார்படுத்தலா என்பது சில கிழமைகளுக்குள் தெரிந்துவிடும். USS Abraham Lincoln, USS Gerald R. Ford ஆகிய அமெரிக்காவின் 2 விமானம் தாங்கி கப்பல்கள் வளைகுடாவுக்கு சென்றுள்ளன. அவற்றுடன் பெருமளவு தாக்குதல் கப்பல்களும் வளைகுடா சென்றுள்ளன. பிரித்தானியாவில் நிலைகொண்டுள்ள யுத்த விமானங்களுக்கு வானத்தில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்காவின் விமானங்களும் (refueling tankers) வளைகுடாவை அண்டிய பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு உள்ளன. ஜோர்டான், பஹ்ரைன், […]
காசாவில் வாழும் பலஸ்தீனருக்கும், West Bank பலஸ்தீனருக்கும் அப்பால் இஸ்ரேலுள்ளும் பெரும்தொகை பலஸ்தீனர் வாழ்கிறார்கள். இஸ்ரேல் குடியுரிமை கொண்ட இவர்கள் மொத்த இஸ்ரேல் சனத்தொகையின் 20%. காசா மற்றும் West Bank பலஸ்தீனரை மட்டுமன்றி இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட பலஸ்தீனரையும் கடுமையாக வஞ்சிக்கிறது இஸ்ரேல். கடந்த ஆண்டு இஸ்ரேல் யூதர்கள் மத்தியில் இடம்பெற்ற கொலைகளில் 65% கொலைகளை இஸ்ரேல் போலீசார் முழு மனதுடன் விசாரணை செய்து கொலையாளிகளை அடையாளம் கண்டுள்ளனர் என்றும் ஆனால் இஸ்ரேல் பலஸ்தீனர் மத்தியில் இடம்பெற்ற கொலைகளில் 15% […]
கனடிய மற்றும் பிரித்தானிய பிரதமர்கள் அண்மையில் சீனா சென்று சீனாவுடனான உறவை புதுப்பித்ததன் காரணமாக சீனா மேற்படி இரண்டு நாட்டவரும் விசா இன்றி 30 தினங்களுக்கு சீனா பயணிக்க வசதி செய்கிறது. இந்த மாதம் 17ம் திகதி முதல் கனடிய மற்றும் பிரித்தானிய கடவுச்சீட்டு வைத்திருப்போர் சீனாவுக்கு 30 தினங்கள் விசா இன்றி பயணிக்க முடியும். இந்த வசதி குறைந்தது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, […]
இலங்கையில் இடம்பெற்ற அரகளைய புரட்சி இலங்கையோ, உலகமோ எதிர்பார்க்காத வகையில் JVP வழிவந்த அனுர தலைமையிலான ஒரு புதிய ஆட்சியை இலங்கைக்கு வழங்கி இருந்தது. ஆனால் பங்களாதேசத்தில் இலங்கை புரட்சிக்கு பின் இடம்பெற்ற மாணவர் புரட்சி ஒரு பழைய கட்சியை விரட்டி மற்றைய பழைய கட்சியை இன்று ஆட்சியில் அமர்த்துகிறது. 1949ம் ஆண்டு முதல் ஒரு பிரதான கட்சியாக இருந்த Awami League கட்சியை அண்மையில் புரட்சி மூலம் விரட்டிய பங்களாதேஷ் தற்போது 1978ம் ஆண்டு முதல் மற்றொரு பிரதான […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் கனடிய பொருட்கள் மீது திணித்த புதிய இறக்குமதி வரிகளை (tariffs) இரத்து செய்ய Democratic கட்சியினர் காங்கிரசில் வாக்கெடுப்புக்கு எடுத்த தீர்மானத்தை 6 Republican கட்சி உறுப்பினர் ஆதரித்து வாக்களித்தால் சில வரிகள் இரத்து செய்யப்படுகின்றன. தனது கட்சியினர் தனது வரிக்கு எதிராக வாக்களித்தால் விசனம் கொண்டுள்ளார் ரம்ப். Thomas Massie (Kentucky மாநிலம்), Don Bacon (Nebraska மாநிலம்), Kevin Kiley (California மாநிலம்), Jeff Hurd (Colorado மாநிலம்), Brian Fitzpatrick (Pennsylvania […]
கனடாவின் British Columbia மாநிலத்தில் உள்ள Tumbler Ridge என்ற சிறு நகரின் Tumbler Ridge Secondary பாடசாலையில் செவ்வாய் இடம்பெற்ற வன்முறைக்கு 7 பேரும், சந்தேக நபரும், அப்பகுதி வீடு ஒன்றில் மேலும் இருவரும் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் 27 பேர் வரை காயப்பட்டும் உள்ளனர். சந்தேகநபர் தன்னை தானே காயப்படுத்தி மரணமானதாகவும் கூறப்படுகிறது. பலியானோர் விபரங்கள், சந்தேக நபரின் விபரங்கள், தாக்குதலுக்கான நோக்கங்கள் என்பன இதுவரை போலீசாரால் வெளியிடப்படவில்லை. ஆனாலும் சம்பவ நேரத்தில் […]
கனடாவின் Ontario மாநிலத்து Windsor நகரத்தையும் அமெரிக்காவின் Michigan மாநிலத்து Detroit நகரத்தையும் இணைக்க $4 பில்லியனுக்கும் மேலான செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட Gordie Howe International Bridge என்ற பால திறப்பு விழாவை தடுப்பேன் என்கிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப். ரம்ப் தனது பதிவில் “I will not allow this bridge to open until the United States is fully compensated for everything we have given them, and […]