சீனாவில் மதிப்பை இழக்கும் மேற்கின் பட்டதாரிகள்

சீனாவில் மதிப்பை இழக்கும் மேற்கின் பட்டதாரிகள்

ஒரு காலத்தில் சீனர் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவது சீனாவில் வேலைவாய்ப்பை பெறும் சந்தர்ப்பத்தை பெருமளவு அதிகரித்து இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது வேகமாக அழிந்து வருகிறது. பதிலுக்கு சீன நிறுவனங்கள் சீன பட்டதாரிகள் மீது நாட்டம் கொள்ள ஆரம்பித்து உள்ளனர். 2019ம் ஆண்டு 703,500 சீனர் வெளிநாடுகள் சென்று பல்கலைக்கழகங்களில் கற்று உள்ளனர். அதில் சுமார் 100,000 மாணவர் பிரித்தானியா சென்று கற்றுள்ளனர். ஆனாலும் உள்ளூரில் பட்டம் […]

தெற்கு ஆபிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை

தெற்கு ஆபிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் தெற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து உள்ளன. தெற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவும்  Omicron என புதிய வகை கரோனா வைரஸே இந்த தடைக்கு காரணம். இந்த புதிய வகை வைரஸ் முதலில் தென் ஆபிரிக்காவில் காணப்பட்டது. பின்னர் Botswana, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங் காங் ஆகிய இடங்களுக்கும் பரவி உள்ளது. மொத்தமாக சில பத்து நோயாளிகளே இதுவரை இவ்வகை தொற்றை கொண்டுள்ளமை அறியப்பட்டு […]

சீன-தாய்வான் முறுகலால் Solomon தீவுகளில் வன்முறை

சீன-தாய்வான் முறுகலால் Solomon தீவுகளில் வன்முறை

சிறிய, வறிய நாடுகளின் உள்நாட்டு கலவரங்களை வல்லரசுகள் தமது அரசியல் நகர்வுகளுக்கு பயன்படுத்த எரியும் தீயை ஊதி வளர்ப்பது உண்டு. அஸ்ரேலியாவுக்கு வடமேற்கே உள்ள Solomon தீவுகளிலும் (Solomon Islands) அவ்வகை வல்லரசுகள் தூண்டும் கலவரங்கள் மீண்டும் தலை தூக்கி உள்ளன. இன்று வெள்ளிக்கிழமை அஸ்ரேலியா தனது படைகளில் சிறு தொகையை அந்நாடு தலைநகர் Honiara நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை பாதுகாக்க அனுப்பி உள்ளது. சுமார் 100 பேர் கொண்ட இந்த படை […]

ரஷ்யாவின் சைபீரிய சுரங்கத்தில் 52 பேர் பலி

ரஷ்யாவின் சைபீரிய சுரங்கத்தில் 52 பேர் பலி

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கு குறைந்தது 52 சுரங்க தொழிலாளர் பலியாகி உள்ளனர். விபத்தில் இறந்தோரை காப்பாற்ற சென்ற அணியிலும் 6 பேர் மரணித்து உள்ளனர். பாதுகாப்புக்கு சென்றோர் கொண்டிருந்த கொள்கலன்களில் (oxygen tank) இருந்த oxygen அளவு குறைந்ததே அவர்களின் மரணத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மொஸ்கோவில் இருந்து சுமார் 3,500 km கிழக்கே உள்ள Listvyazhnaya என்ற இந்த சுரங்கத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்துக்கு மேலும் 49 […]

ஆங்கில கால்வாயில் 27 அகதிகள் பலி

ஆங்கில கால்வாயில் 27 அகதிகள் பலி

பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சென்ற அகதிகள் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததால் குறைந்தது 27 அகதிகள் பலியாகி உள்ளனர். இன்று புதன் காலை பிரான்சின் Calais பகுதிக்கு அண்மையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய படைகளும் மீனவரும் தேடுதலில் ஈடுபட்டு உள்ளனர். விபத்தின் பின் சிலர் உயிருடன் மீட்கப்பட்டும் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இது winter காலமாகையால் கால்வாய் நீர் மிகவும் குளிராக உள்ளது. குளிர் நீரில் நீண்ட நேரம் இருப்பது உயிருக்கு ஆபத்தானது. […]

புனிதத்தை மறந்து குடிவரவாளரை நாடும் ஜப்பான்

புனிதத்தை மறந்து குடிவரவாளரை நாடும் ஜப்பான்

மிக நீண்ட காலமாக ஜப்பானியர் தம்மை ஒரு புனித இனமாக கருதியிருந்தனர். சீனர், கொரியர் எல்லாம் ஜப்பானியர் பார்வையில் புனிதம் குறைந்த இனமாகவே கருதப்பட்டனர். தமது இனத்துள் வேறு இனங்களை கலப்பதை விரும்பாத ஜப்பான் அங்கு வெளியார் சென்று குடியேறுவதை முற்றாக தவிர்த்து இருந்தனர். ஆனால் வேகமாக அழிந்து வரும் அந்நாட்டின் சனத்தொகை காரணமாக ஜப்பான் வெளிநாட்டினரை அழைக்க ஆரம்பித்து உள்ளது. இதுவரை தொழிலாளரை மட்டும் அழைத்த ஜப்பான் தற்போது தொழிலாளரின் குடும்பங்களையும் அழைக்க வசதி செய்கிறது. […]

பல்கேரியா பஸ் தீக்கு 46 பேர் பலி

பல்கேரியா பஸ் தீக்கு 46 பேர் பலி

பல்கேரியாவின் (Bulgaria) மேற்கு பகுதியில் உள்ள Sofia என்ற நகருக்கு தெற்கே இடம்பெற்ற பஸ் தீக்கு குறைந்தது 46 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் 12 சிறுவர்களும் அடங்குவர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 2:00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. North Macedonia என்ற நாட்டில் இருந்து துருக்கிக்கு உல்லாச பயணம் சென்றவர்கள் நாடு திரும்புகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றாலும், பஸ் பாதையோரம் இருந்த 50 மீட்டர் நீள […]

பிரான்சின் உதவியுடனேயே எகிப்து மக்களை கொன்றது

பிரான்சின் உதவியுடனேயே எகிப்து மக்களை கொன்றது

பிரான்ஸ் வழங்கிய உளவுகளை பயன்படுத்தியே எகிப்து பொதுமக்களை விமான தாக்குதல்கள் மூலம் கொலை செய்தது என்று கூறுகிறது Disclose என்ற புலனாய்வு வெளியீடு. இது தொடர்பாக கருத்து கூற பிரான்ஸ் மறுத்து வருகிறது. எகிப்துக்கு மேற்கே உள்ள லிபியாவில் தற்போது இடம்பெறும் யுத்தம் வெளிநாடுகளின் கைவரிசையை. அங்கு உள்ள எண்ணெய்வளமும் வெளிநாடுகள் லிபியாவை நாட காரணம். லிபியாவில் இருந்த சர்வாதிகாரி கடாபியை விரட்டிய மேற்கு நாடுகள் அங்கு தமது பொம்மை அரசை அமைக்க முயன்று வருகின்றன. அதிலும் […]

கடந்த ஆண்டு சீன பிறப்பு 2.65 மில்லியனால் வீழ்ச்சி

கடந்த ஆண்டு சீன பிறப்பு 2.65 மில்லியனால் வீழ்ச்சி

2020ம் ஆண்டு சீனாவில் 12 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளன. 2019ம் ஆண்டு அங்கு 14.65 மில்லியன் குழந்தைகள் பிறந்து இருந்தன. அதாவது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டு சீனாவில் பிறந்த குழந்தைகளின் தொகை 2.65 மில்லியனால் அல்லது 18% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. 2020ம் ஆண்டில் 1,000 சனத்தொகைக்கு 8.52 அங்கு குழந்தைகள் என்ற விகிதத்திலேயே குழந்தைகள் பிறந்து உள்ளன. 1963ம் ஆண்டு 1,000 சனத்தொகைக்கு அங்கு 43.6 குழந்தைகள் என்ற விகிதத்தில் […]

நத்தார் ஊர்வலத்தை வாகனம் தாக்கி பலர் பலி

நத்தார் ஊர்வலத்தை வாகனம் தாக்கி பலர் பலி

அமெரிக்காவின் Wisconsin மாநிலத்து பெரு நகரான Milwaukee க்கு மேற்கே உள்ள புறநகரான Waukesha இன்று ஞாயிறு பிற்பகல் 2:00 மணியளவில் இடம்பெற்ற நத்தார் ஊர்வலத்தினூடு (Christmas parade) SUV வகை வாகனம் ஒன்று வேகமாக சென்று மோதியதால் சிலர் பலியாகியும், மேலும் பலர் காயமடைந்து உள்ளனர். இந்த மோதலுக்கு சிலர் பலியாகி உள்ளதாக போலீசார் கூறி இருந்தாலும், பலியானோர் தொகையை இதுவரை அறிவிக்கவில்லை. பலியானோர் பெயர்களும் அறிவிக்கப்படவில்லை. வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டவர் தொகை 28 என்றும் […]