2025ம் ஆண்டில் சீனாவின் BYD என்ற மின்னில் இயங்கும் கார்களை தயாரிக்கும் நிறுவனம் 2.26 மில்லியன் கார்களை உலகம் எங்கும் விற்பனை செய்துள்ளது. ஆனால் அமெரிக்காவின் Tesla என்ற கார் நிறுவனம் 2025ம் ஆண்டு 1.64 மில்லியன் கார்களை மட்டுமே உலகம் எங்கும் விற்பனை செய்துள்ளது. 2024ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு Tesla விற்பனை தொகை 9% ஆல் குறைந்து உள்ளது. இரண்டாவது ஆண்டாக Tesla வின் உலக அளவிலான விற்பனை தொகை குறைந்து உள்ளது. […]
சீன விமான சேவைகள் சில ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus விமானங்கள் 145 ஐ கொள்வனவு செய்ய முன்வந்துள்ளன. சீனாவின் இந்த பெரிய Airbus கொள்வனவு அமெரிக்காவின் Boeing விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய ஏமாற்றமாகும். வழமையாக சீனா அரை பங்கு விமானங்களை Airbus சிடம் இருந்தும், அரை பங்கு விமானங்களை அமெரிக்க Boeing கிடம் இருந்தும் கொள்வனவு செய்யும். ஆனால் இம்முறை அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனாவுடன் வரி மோதலில் ஈடுபடுவதே சீனா Boeing விமானங்கள் எதையும் கொள்வனவு செய்யாமைக்கான […]
சுமார் 35 ஆண்டுகள் நிதானமான விலையை கொண்டிருந்த சாக்லேட் (chocolate) கடந்த சுமார் ஒரு ஆண்டு காலமாக பல மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. சாக்லேட் தரத்துக்கு ஏற்ப அவற்றின் விலை முன்னரிலும் 200% முதல் 500% வரை அதிகமாக இருந்தது, தற்போதும் அவ்வாறே உள்ளது. ஆனால் உலக சந்தையில் சாக்லேட் விலை விரைவில் குறைய உள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சாக்லேட்டின் மூலப்பொருளான கொக்கோ பவுடரின் (cocoa) விலை மிகையாக அதிகரித்ததே சாக்லேட் விலை அதிகரிக்க காரணம். 2024ம் ஆண்டு டிசம்பர் […]
சீனாவின் இந்த ஆண்டுக்கான surplus (மொத்த இறக்குமதிக்கு மேலான ஏற்றுமதி டாலர் பெறுமதி) வரலாற்றில் முதல் தடவையாக $1 டிரில்லியனை ($1,080 பில்லியன்) தாண்டி உள்ளது. சீன பொருட்கள் மீதான அமெரிக்க சனாதிபதி ரம்பின் கடுமையான இறக்குமதி வரிகளுக்கும் மத்தியில் சீன ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இந்த $1.08 பில்லியன் surplus நவம்பர் வரையான முதல் 11 மதங்களின் தொகை மட்டுமே. ஆண்டு இறுதியில், டிசம்பர் மாத தொகையுடன் கூடிய, surplus மேலும் அதிகரிக்கும். 2024ம் ஆண்டின் (12 […]
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையான 10 மாதங்களில் இலங்கை $14 பில்லியன் பெறுமதியான பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுமதி செய்துள்ளது என்கிறது Export Development Board (EDB). இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல் 10 மாதங்களுக்கான அதிக ஏற்றுமதி வருமானம். இந்த ஆண்டின் 12 மாதங்களுக்கான மொத்த ஏற்றுமதி குறி $18 பில்லியன். கடந்த ஆண்டின் முதல் 10 மாத கால பகுதியின் ஏற்றுமதியிலும் இந்த ஆண்டு ஏற்றுமதி 6% ஆல் அதிகரித்து உள்ளது. இந்த ஏற்றுமதியுள் சாதாரண […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் இந்தியா மீது தொடுத்த பலமுனை வர்த்தக, பொருளாதார தாக்குதல்களால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்று கணித்த மோதி அரசு பெரும் வரி குறைப்புகளை இன்று திங்கள் அறிவித்துள்ளது. இந்திய பொருட்கள் மீது ரம்ப் திணித்த 50% இறக்குமதி வரி, தற்போது அறிவிக்கப்படுள்ள H-1B விசாவுக்கான $100,000 கட்டணம் எல்லாமே இந்தியாவை பெரிதும் பாதிக்கும். இன்று இந்தியாவில் பால், பாண், மருந்து வகைகள் ஆகியனவற்றுக்கு வரி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. சிறிய கார், தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள் […]
கணனிகள் தோன்றிய காலம் முதல் chip உலகில் முடிசூடா மன்னனாக இருந்த அமெரிக்க Intel நிறுவனம் அண்மையில் AI வல்லமையுடன் கூடிய nVIDIA வருகையால் பின் தள்ளப்பட்டது. ஆனாலும் nVIDIA நிறுவனம் வியாழக்கிழமை Intel நிறுவனத்தில் $5 பில்லியன் முதலிடுகிறது. Intel நிறுவனம் chip வடிவமைப்பு (design), உற்பத்தி (manufacturing) இரண்டிலும் வல்லமை கொண்டது. ஆனால் வடிவமைப்பில் வல்லமை கொண்ட nVIDIA விடம் உற்பத்தி வல்லமை இல்லை. அதனாலேயே nVIDIA தான் வடிவமைக்கும் chip உற்பத்திக்கு Intel […]
அமெரிக்க ரம்ப் அரசு Halting International Relocation of Employment Act 2025 (HIRE Act 2025) என்ற சட்டத்தை நடைமுறை செய்ய முனைகிறது. அவ்வாறு சட்டம் ஒன்று நடைமுறை செய்யப்பட்டால் அந்த சட்டத்தால் அதிகம் பாதிப்பு அடையப்போவது இந்தியாவே. பொருட்கள் அமெரிக்க துறைமுகங்களை அடையும்போது இலகுவில் இறக்குமதி வரி அரவிடலாம். ஆனால் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் software களுக்கு அவ்வாறு வரி அறவிட முடியாது. சிலவேளைகளில் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்தே அமெரிக்காவில் software code எழுதப்படலாம். […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் நடைமுறை செய்த புதிய இறக்குமதி வரியால் அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான GM (General Motors) க்கு இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் $1.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் முழு ஆண்டுக்கும் சுமார் $4 பில்லியன் முதல் $5 பில்லியன் வரையான இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு GM $14.9 பில்லியன் இலாபம் அடைந்திருந்தாலும் 2025ம் ஆண்டில் $10 பில்லியன் முதல் $12.5 பில்லியன் வரையிலான இலாபத்தையே அடையும் […]
nVIDIA என்ற artificial intelligence வல்லமை கொண்ட chip களை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி (market capital) $4 டிரில்லியன் ($4,000 பில்லியன்) ஆகியுள்ளது. உலகில் nVIDIA மட்டுமே $4 டிரில்லியன் பெறுமதி கொண்ட நிறுவனம். ஆனாலும் ரம்ப் அரசு விதித்த தடைகள் காரணமாக nVIDIA சீன சந்தையை தற்போது இழந்துள்ளது. சீன சந்தையை மீண்டும் கைப்பற்ற nVIDIA CEO Jensen Huang சில தினங்களில் சீனா செல்கிறார். அதற்கு முன் வியாழன் Huang […]