காசாவில் சமாதானம் அமைத்து அதை அபிவிருத்தி செய்யவென்று அமெரிக்க சனாதிபதி தன் தலைமையில் உருவாக்கும் Board of Peace என்ற அமைப்பை உண்மையில் ஐ.நா. வுக்கு மாற்றீடாக உயர்த்த முனைவது தெரிகிறது. இந்த Board of Peace காசாவில் ஆரம்பித்து இருந்தாலும் இதன் தற்போதைய வரைவிலக்கணத்தில் காசா என்ற சொல்லே இல்லை என்று கூறப்படுகிறது. இதன் புதிய வரைவிலக்கணம் “an international organization that seeks to promote stability, restore dependable and lawful governance, and […]
சீனாவின் மிகப்பெரிய தூதரகம் ஒன்றை லண்டன் நகரில் அமைக்க இன்று செவ்வாய் பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பில் (215,000 சதுர அடி) அமையவுள்ள இது ஐரோப்பாவில் மிகப்பெரிய சீன தூதரகமாக இருக்கும். இந்த தூதரகம் அமைய உள்ள இடம் பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது. இந்த தூதரகம் பிரித்தானியாவின் பிரபல Tower Bridge குக்கு அண்மையில் அமையவுள்ளது. இந்த இடம் லண்டன் Financial District க்கு அண்மையில் உள்ளது மட்டுமன்றி, லண்டன் நகரின் பிரதான […]
கடந்த சனிக்கிழமை இலங்கையில் பார்வைக்கு வைக்கப்பட்ட 3,563 கரட் நீல கல்லின் (Purple Star Sapphire) பெறுமதி சுமார் $300 மில்லியன் முதல் $400 மில்லியன் வரை என்று கணிக்கப்படுகிறது. இவ்வகை கற்களில் இந்த கல்லே உலகத்தில் மிக பெரியது. இந்த கல்லுக்கு “Star of Pure Land” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த கல் Gemological Institute of America வின் சான்றிதழை பெற்றுள்ளது. நீல கல் நவரத்தினங்களில் ஒன்று இரத்தினமாகும். மேற்படி கல் 2023ம் ஆண்டு இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டு […]
1972ம் ஆண்டுக்கு பின் அமெரிக்காவின் விண்கலம் ஒன்று மீண்டும் சந்திரனை 4 விண்வெளி வீரர்களுடன் வலம் வர உள்ளது. பெப்ரவரி மாதம் 6ம் திகதி (2026-02-06) இந்த விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்படும். நாசாவின் Space Launch System (SLS) ஏவுகணை மூலம் ஏவப்படும் Orion என்ற இந்த பயணிகளை காவும் கலத்தில் 3 அமெரிக்க வீரர்களும் 1 கனடிய வீரரும் பயணிப்பர். இந்த ஏவுகணை Florida மாநிலத்தில் உள்ள Kennedy Space Center தளத்தில் இருந்து […]
அமெரிக்கா BYD போன்ற சீன நிறுவனங்கள் தயாரிக்கும் மின்னில் இயங்கும் EV (Electric Vehicle) கார்களுக்கு 100% இறக்குமதி வரியை அறிவித்த உடனே பிரதமர் ரூடோ ஆட்சியில் கனடாவும் மேற்படி கார்களுக்கு 100% இறக்குமதி வரியை அறிவித்து இருந்தது. அந்த வரியை நிறுத்தவுள்ளதாக புதிய கனடிய பிரதமர் கார்னி இன்று வெள்ளி அறிவித்துள்ளார். கார்னி இரண்டு தின சீன பயணத்தை மேற்கொண்ட பின்னரே இந்த அறிவிப்பை செய்துள்ளார். முதலில் 49,000 சீன EV கார்கள் மட்டுமே கனடாவுக்குள் அனுமதிக்கப்படும். ஐந்து […]
கடந்த ஆண்டுக்கான (2025) சீனாவின் மொத்த surplus (மொத்த ஏற்றுமதி – மொத்த இறக்குமதி) $1.2 ட்ரில்லியன் (அல்லது $1,200 பில்லியன்) ஆக இருந்துள்ளது. இத்தொகை 2024ம் ஆண்டின் surplus இலும் 20% அதிகம். அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீன பொருட்கள் மீது பெரும் இறக்குமதி வரியை திணித்து இருந்தாலும் சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கே சீனா அதிக பொருட்களை ஏற்றுமதி செய்து இருந்தாலும் அத்தொகை 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டு 19.5% ஆல் […]
முதலாம் உலக யுத்தத்துக்கு பின் முதல் தடவையாக கடந்த 2025ம் ஆண்டு பிரான்சில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை அங்கு மரணித்தோரின் எண்ணிக்கையிலும் குறைவாக இருந்துள்ளது. பிரான்சின் புள்ளிவிபர அமைப்பான INSEE செவ்வாய் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த ஆண்டு பிரான்சில் 651,000 பேர் மரணிக்க, 645,000 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளன. அதாவது fertility rate (சராசரியாக தாய்மை வயதுக்குரிய ஒவ்வொரு பெண்ணும் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை) 1.56 ஆக மட்டுமே இருந்துள்ளது. ஒரு நாட்டின் சனத்தொகை அதிகரிக்காமலும், குறையாமலும் இருக்க […]
Federal Reserve என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் மத்திய வங்கி தலைவர் (Chairman) Jerome Powell மீது அமெரிக்க சனாதிபதி ரம்ப் criminal விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளார். தனது விருப்பத்துக்கு ஏற்ப Powell மத்திய வங்கியின் வரி வீதத்தை குறைக்கவில்லை என்பதால் ரம்ப் Powell மீது கடுமையான மூர்க்கம் கொண்டிருந்தார். ஆனால் அரசியல் தலையீடு இன்றி பொருளாதார கணிப்புக்களுக்கு ஏற்பவே மத்திய வங்கியின் வரி வீதம் தீர்மானிக்கப்படும் என்று Powell ரம்பின் வேண்டுகோளுக்கு மறுப்பு கூறியுள்ளார். மூர்க்கம் அடைந்த ரம்ப் மத்திய […]
இந்தியா, நேபாள், பங்களாதேஷ், பூட்டான் ஆகிய 4 நாடுகளில் இருந்து அஸ்ரேலியா செல்வதற்கான மாணவ விசா விண்ணப்பங்களுக்கு அஸ்ரேலியா மேலும் நெருக்கடிகளை திணித்து உள்ளது. இதுவரை Evidence Level 2 வகைக்குள் இருந்த இந்த மாணவரின் விசா விண்ணப்பங்கள் தற்போது Evidence Level 3 வகைக்கு மாற்றப்பட்டு உள்ளன. Evidence Level 3 வகை மாணவ விசா விண்ணப்பங்கள் அதிகரித்த விசாரணைகளுக்கு உட்படும். இந்த மாணவரின் கல்வி தகைமைகள், பொருளாதார நிலைமை, இவர்களின் உள்நோக்கங்கள் என்பன ஆழமாக ஆராயப்படும். அண்மையில் இந்திய மாணவர் […]