மூலைக்கு மூலை தமிழ் மரபு திங்கள் கொண்டாடி, நகரத்துக்கு நகரம் தமிழ் கொடி ஏற்றி, வீதிக்கு வீதி தமிழ் விழா கொண்டாடி தமிழை வயிற்று பிழைப்புக்கு மட்டும் பயன்படுத்தும் தமிழரை கொண்ட கனடாவில் இணையம் மூலம் வர்த்தகம் செய்யும் Amazon நிறுவனம் (amazon.ca) C$19.66 க்கு விற்பனை செய்யும் தமிழ் குறுக்கெழுத்து புத்தகம் ஒன்று தமிழை கண்டதுண்டமாக வெட்டி படுகொலை செய்துள்ளது. TAMIL CROSSWORD PUZZLE BOOK என்ற இந்த புத்தகம் வழங்கும் குறுக்கெழுத்து பயிற்சிகள் மெய் எழுத்துகளில் உள்ள குற்றை பிரித்து ஒரு எழுத்தாகவும், […]
அஸ்ரேலியாவின் சிட்னி பகுதியில் உள்ள Bondi Beach என்ற கடற்கரையில் யூதர்களின் Hanukkah நிகழ்வை கொண்டாடிய யூதர்களில் 11 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த கடற்கரை நிகழ்வு ஞாயிறு மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி இருந்தது. துப்பாக்கி தாக்குதல் இரவு 9:30 மணியளவில் இடம்பெற்றது. சுட்டவரில் ஒருவரும் பலியாகி உள்ளார். இன்னொருவர் வைத்தியசாலையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கிருந்த கார் ஒன்றில் சில வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அவை தற்போது போலீசாரால் அகற்றப்பட்டு உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
Facebook இணையம் பொய்யர்கள், மூடர்களின் சுவர்க்கம். இதில் தெளிவு இன்றி, ஆதாரம் இன்றி எதையும் எவரும் எழுதலாம். சிலவேளைகளில் அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கலாம். பலாலி விமான நிலையமும் தற்போது இவ்வகை facebook மூட பதிவுகளில் அகப்பட்டு உள்ளது. இந்த பதிவுகளுக்கு “அப்பிடி கேளடா தம்பி” என்று like குகளும் குவிகின்றன. அண்மையில் அமெரிக்காவின் பெரிய இராணுவ விமானமான C-130 Hercules இறங்கி உதவி பொருட்களை வழங்கிய பின் சில தமிழ் facebook போராளிகளுக்கு இலங்கை மற்றும் இந்திய அரசுகளை […]
கனடா ஒரு முதலாம் வர்க்க நாடு என்றாலும் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான கனடிய அரசியல்வாதிகள் மூன்றாம் உலக (third-world) அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவில் குப்பாடி அரசியல் செய்ய ஆரம்பித்து உள்ளனர். 2025ம் ஆண்டு அக்கால லிபெரல் (Liberal) கட்சி பிரதமர் ரூடோவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியபோது பின் கதவால் மார்க் கார்னி என்பவர் கொண்டுவரப்பட்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தேர்தலில் லிபெரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மொத்த 343 ஆசனங்களில் லிபரல் கட்சி 169 ஆசங்களை மட்டுமே கைப்பற்றி ஒரு […]
இன்று புதன்கிழமை முதல் அஸ்ரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு social media சேவை தடை செய்யப்பட்டுள்ளது. உலகில் இவ்வாறான தடை ஒன்றை நடைமுறை செய்யும் முதலாவது நாடு அஸ்ரேலியாவே. YouTube, Facebook, TikTok, Snapchat, Instagram, X, Reddit உட்பட அனைத்து social media சேவைகளும் இந்த அஸ்ரேலிய சட்டத்துக்கு உட்பட 16 வயதினருக்கான சேவைகளை துண்டிக்க இணங்கி உள்ளன. ஆரம்பத்தில் இந்த நிறுவனங்கள் தடைக்கு எதிர்ப்பை தெரிவித்து இருந்தாலும் இறுதியில் தடைக்கு உட்பட தள்ளப்பட்டு உள்ளனர். இந்த சட்டம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தினால் ஏனைய நாடுகளும் இவ்வகை […]
அஸ்ரேலியாவின் மலிவு விலை (low-cost) விமான சேவையான Jetstar 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி முதல் அஸ்ரேலியாவின் மெல்பேர்ன் (Melbourne) நகருக்கும் கொழும்புக்கும் இடையில் கிழமைக்கு 3 நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது. செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ள இந்த சேவைக்கு Jetstar புதிதாக வடிவமைக்கப்பட்ட தனது wide-body Boeing 787 Dreamliner விமானங்களை பயன்படுத்த உள்ளது. ஆரம்பத்தில் சிறுதொகை ஒருவழி பயண கட்டணம் A$315 ஆக இருந்தாலும் தற்போது ஒருவழி கட்டணம் A$384 வரைக்கு […]
சீனாவின் இந்த ஆண்டுக்கான surplus (மொத்த இறக்குமதிக்கு மேலான ஏற்றுமதி டாலர் பெறுமதி) வரலாற்றில் முதல் தடவையாக $1 டிரில்லியனை ($1,080 பில்லியன்) தாண்டி உள்ளது. சீன பொருட்கள் மீதான அமெரிக்க சனாதிபதி ரம்பின் கடுமையான இறக்குமதி வரிகளுக்கும் மத்தியில் சீன ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இந்த $1.08 பில்லியன் surplus நவம்பர் வரையான முதல் 11 மதங்களின் தொகை மட்டுமே. ஆண்டு இறுதியில், டிசம்பர் மாத தொகையுடன் கூடிய, surplus மேலும் அதிகரிக்கும். 2024ம் ஆண்டின் (12 […]
மேற்கு ஆபிரிக்க நாடான பெனின்னில் (Benin) சில இராணுவ வீரர்கள் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு செய்ய, அண்டை நாடான நைஜீரியா தனது படைகளை அனுப்பி ஆட்சி கவிழ்ப்பை முறியடித்து உள்ளது. டிசம்பர் 7ம் திகதி ஞாயிறு காலை பெனின் இராணுவ லெப். கேணல் Pascal Tigri தான் சனாதிபதி Patrice Talon ஐ ஆட்சியில் இருந்து விலக்கி, அந்நாட்டு சட்டங்களை இடைநிறுத்தி, ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக அந்த நாட்டின் தேசிய தொலைக்காட்சி மூலம் அறிவித்திருந்தார். ஆனால் சனாதிபதிக்கு ஆதரவான படைகள் ஆவர் பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தனர். சனாதிபதி பிரெஞ்ச் தூதரகத்தில் இருந்திருக்கலாம் என்றும் […]
இந்தியா தனது தேவைக்காக உரு ஏற்றிவிட தன் கைக்கு அடங்காத யுத்தத்துக்கு சென்ற இலங்கை தமிழரின் சனத்தொகை இலங்கையில் வேகமாக அழிவது போல் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ஏற்றிய உருவால் ரஷ்யாவுடன் மோதும் யூக்கிறேனின் சனத்தொகையும் வேகமாக அழிந்து வருகிறது. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு முன் யூக்கிறேனில் சனத்தொகை 42 மில்லியன் ஆக இருந்தது. தற்போது அங்கு சனத்தொகை 36 மில்லியன் மட்டுமே. குறிப்பாக யூக்கிறேன் இழந்தது பிள்ளை பெறும் இள வயதினரை. 2051ம் ஆண்டு அளவில் யூக்கிறேன் சனத்தொகை 25 மில்லியன் ஆக […]
இந்தியாவின் ÍndiGo விமான சேவை கடந்த சில தினங்களாக பலத்த நெருக்கடியில் உள்ளது. இது சுமார் 1,000 விமான சேவைகளை இடைநிறுத்தம் செய்ததால் இந்தியாவில் விமான சேவை பாரிய பாதிப்புக்கு உள்ளாகியது. அண்மையில் இந்திய அரசு நடைமுறை செய்யவிருந்த விமானிகளுக்கான புதிய விதிகளே IndiGo குழப்பத்துக்கு காரணம். விமான சேவை பாதுகாப்பை கருத்தில் கொண்ட இந்திய அரசு அண்மையில் விமானிகள் தொடர்பாக நடைமுறை செய்த விதிகள் சில வருமாறு: 1) விமானிகள் ஒவ்வொருவரும் கிழமை ஒன்றுக்கு குறைந்தது 48 மணித்தியால ஓய்வை கொண்டிருக்க […]