குமுதினி 2

. 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவில் இருந்து குறிக்கட்டுவான் நோக்கி சென்ற குமுதினி என்ற படகில் இருந்த குறைந்தது 36 தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இதை அறிந்தவர் அழுதனர். அவ்வழி படகுக்கு தற்போது இன்னோர் அந்தர்தமும் இயற்கையின் அல்லது மனித தவறு காரணமாக அங்கு மீண்டும் நிகழலாம். ஆனால் அதன் பொருட்டு உரியவர்கள் கவலை கொள்வதாகவும் தெரியவில்லை. ஒருவேளை அனர்த்தம் நிகழ்த்தபின் மட்டும் இவர்கள் மீண்டும் அழுவார்களோ? . […]

அரசர் தடுத்தார் இளவரசி அரசியலை

நேற்று தாய்லாந்தின் முன்னாள் இளவரசி எதிர்கட்சி கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி இருந்தார். இதனால் மிரண்ட இராணுவ சார்பு கட்சி இராணுவ சார்பு அரசரை நாட, அவரும் முன்னாள் இளவரசி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்துள்ளார். இது தொடர்பாக இளவரசி இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. . சாதாரண அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்ததால் தாய்லாந்து அரச அதிகாரத்தை இழந்த 67 வயதுடைய முன்னாள் இளவரசி, சாதாரண ஒரு பிரசைக்கு உள்ள உரிமைப்படி தான் தேர்தலில் […]

தாய்லாந்து இளவரசி தேர்தலில் போட்டி

தாய்லாந்தின் இளவரசி வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்து உள்ளார். 1932 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் நடைமுறையில் உள்ள அரச தலைமை (constitutional monarchy) முறையில் அரச குடும்பத்தினர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் தடவை. இந்த இளவரசியின் சகோதரனே (King Maha Vajiralongkorn) தற்போதைய அரசர் ஆவார். . தாய்லாந்து அரசியல் இராணுவ ஆதரவு தரப்புக்கும், மக்கள் ஆதரவு தரப்புக்கும் இடையில் நீண்ட காலமாக இழுபட்டு வந்துள்ளது. மக்கள் தெரிவு செய்திருந்த […]

மோதி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது?

இந்திய பிரதமர் மோதியின் ஆட்சி காலத்தில் அங்கு வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்து உள்ளதாக அண்மையில் வெளிவந்த தரவுகள் கூறுகின்றன. இந்த உண்மை வரும் மே மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் மோதியை பெரிதும் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. . அரச ஆதரவில் இயங்கும் National Statistical Commission தனது கூற்றில், 2017-2018 காலத்தில் இந்தியாவின் வேலைவாய்ப்பு இன்மை 6.1% என்றும் அது கடந்த 45 வருட காலத்தில் மிக அதிக வேலைவாய்ப்பு இன்மை என்றும் கூறியுள்ளது. . […]

வியட்நாமில் இரண்டாம் ரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ரம்பும் (Trump), வடகொரிய தலைவர் கிம்மும் (Kim) தமது இரண்டாம் சந்திப்பை வியட்நாமில் நிகழ்த்தவுள்ளனர். இந்த மாதம் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் (February 27, 28) இவர்கள் நேரடியாக சந்திக்கவுள்ளனர். சிங்கப்பூரில் இடம்பெற்ற இவர்களின் முதலாம் சந்திப்பு எதையும் சாதிக்காத நிலையில் இந்த இரண்டாம் சந்திப்பு தொடர்பான எதிர்பார்ப்புகள் மிக குறைவே. . வடகொரியா பதிலுக்கு எதையும் எதிர்பாராது தனது அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று ரம்ப எதிர்பார்க்கிறார். […]

பொய்யான அமெரிக்க பல்கலைக்கழகம், 129 கைது

அமெரிக்க அரசு இயக்கிய பொய்யான பல்கலைக்கழகம் ஒன்றில் இணைந்த 129 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனால் விசனம் கொண்டுள்ளது இந்திய அரசு. டில்லியில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் விளக்கமும் கேட்கப்பட்டு உள்ளது. . அமெரிக்காவுக்கு உண்மையான மாணவ விசாவில் (student visa) செல்லும் இந்தியர்கள், அங்கு தொடர்ந்து வசிக்க தொடர்ச்சியான படிப்பை பயன்படுத்துவது உண்டு. ஆனால் விசா பெற பயன்படுத்திய உண்மையான கல்வி நிலையம் போல் தொடர்ச்சியான படிப்புக்கு பயன்படுத்தும் கல்வி நிலையங்கள் இருப்பதில்லை. தொடர்ச்சியான […]

அமெரிக்கா, கனடா கடும் குளிரில்

அமெரிக்காவின் பகுதிகளும், கனடாவும் கடும் குளிரில் மூழ்கி உள்ளன. Polar vortex என்று அழைக்கப்படும் வடதுருவ குளிர் வழமைக்கும் அதிகமாக கீழே தள்ளப்பட்டத்தால் குறிப்பாக அமெரிக்காவின் Illinois, Wisconsin, North Dakota, Michigan ஆகிய மாநிலங்களும், கனடாவும் கடும் குளிரில் மூழ்கி உள்ளன. இவ்விடங்கள் வழமைக்கு மாறாக அதிக snow வையும் பெற்றுள்ளன. . ஏற்கனவே பல நாட்களாக கடும் குளிருள் மூழ்கி உள்ள சிக்காகோ நகரம் மேலும் சில நாட்களுக்கு கடும் குளிருள் தொடர்ந்தும் மூழ்கி […]

Huawei யுத்தத்தில் வீழ்ந்தார் கனடிய தூதுவர்

அமெரிக்காவின் Huawei மீதான யுத்தத்தில் சீனாவுக்கான கனடிய தூதுவர் John McCallum இன்று வீழ்ந்துள்ளார். கனடிய பிரதமர் Trudeau இன்று சீனாவுக்கான கனடிய தூதுவரை பதவியை விட்டு விலக கூறியுள்ளார். தூதுவரும் கேட்டுக்கொண்டதன்படி பதவி விலகி உள்ளார். . சீனாவின் Huawei என்ற தொழிநுட்ப நிறுவனத்தின் CFO (Chief Financial Officer) Meng Wanzhou அண்மையில் கனடாவில் கைது செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் ஈரான் மீதான தடையை Huawei மீறியது என்று கூறிய அமெரிக்காவே Wanzhouவை கைது […]

ரம்பின் கூட்டாளி Roger Stone கைது

அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் முக்கிய கூட்டாளி Roger Stone அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரம்பின் அணியின் தேர்தல் அலுவலகம் ரஷ்யாவுடன் இணைந்து தேர்தல் குளறுபடிகளில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டின் காரணமாகவே Stone கைது செய்யப்பட்டு உள்ளார். . Robert Mueller என்பவர் தலைமையில் நடாத்தப்படும் Special Counsel investigation of Russian interference என்ற விசாரணை அமைப்பே Stone என்பவரை கைது செய்துள்ளது. […]

வெனிசுவேலாவில் அமெரிக்கா ஆட்சி கவிழ்ப்பு?

பாரிய பொருளாதார இடருள் இருக்கும் வெனிசுவேலா என்ற தென் அமெரிக்க நாட்டில் அமெரிக்கா ஒரு ஆட்சி கவிழ்ப்பை செய்கிறது என்று கூறப்படுகிறது. இதுவரை காலமும் இடதுசாரி கட்சியால் ஆளப்பட்டு வந்த வெனிசுவேலா, பெட்ரோலிய சந்தையின் வீழ்ச்சி காரணமாக, பாரிய பொருளாதாரா இடருள் உள்ளது. . இன்று வெனிசுவேலாவின் எதிர் கட்சி தலைவர் Juan Guaido தன்னை தானே வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பிரகடனப்படுத்தி உள்ளார். தேர்தல் எதுவும் இன்றி அமெரிக்க ஆதரவு எதிர் கட்சி செய்த அறிவிப்பை […]