இந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் ஆகஸ்ட் 18ம் திகதி வரையான காலத்தில் 1,468,980 உல்லாச பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று Sri Lanka Tourism Development Authority (SLTDA) கூறியுள்ளது. இக்காலத்தில் முதலாவதாக 366,114 இந்திய உல்லாச பயணிகளும் (சுமார் 25%), இரண்டாவதாக 144,381 பிரித்தானிய உல்லாச பயணிகளும், மூன்றாவதாக 97,073 சீன உல்லாச பயணிகளும் வந்துள்ளனர். இந்த ஆண்டு பெப்ரவரி மாதமே அதிக உல்லாச பயணிகள் (279.328) இலங்கை வந்துள்ளனர். ஆகஸ்ட் மாத […]
ஏனைய நாடுகளுடன் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த வர்த்தக யுத்தங்களை போலவே அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ரம்ப் ஆரம்பித்த வர்த்தக யுத்தம் மேலும் உக்கிரம் அடைகிறது. கனடிய பிரதமர் கார்னி பதவிக்கு வந்த காலத்தில் தான் ரம்புடன் பேசி ஒரு உடன்படிக்கைக்கு வரலாம் என்று கொண்டிருந்த கனவு பலிக்காது போக, தற்போது அவரும் அமெரிக்க பொருட்கள் சிலவற்றுக்கு பதில் இறக்குமதி வரிகளை சனிக்கிழமை அறிவித்து உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்க்க பேச்சுக்கள் வெள்ளிக்கிமைமை முறிய, ரம்ப் $20 […]
அடுத்த ஆண்டு (2027) எல் நீனோ (El Nino, ஸ்பானிஸ் மொழியில் “little boy”) இலங்கை உட்பட பல இடங்களுக்கு அதி உயர் வெப்பத்தையும், வேறு பல இடங்களில் பெரு மழை வீழ்ச்சியையும் தரும் என்று பிரித்தானியாவின் Meteorological Office (Met Office) கூறியுள்ளது. 2027ம் ஆண்டில் உலகின் சராசரி வெப்பம் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அதி கூடியதாகவும் இருக்குமாம். சாதாரண காலங்களில் மத்திய கோட்டை அண்டிய கடல்களில் காற்று கிழக்கே இருந்து மேற்கு நோக்கி சாதாரணமாக […]
அமெரிக்க இராணுவத்தில் இணையும் ஆர்வம் அமெரிக்கர் மத்தியில் குறைந்து உள்ளதால் ஏற்கனவே சுயமாக விரும்பி இணைந்துள்ள (enlist) இராணுவ சேவையை நீடித்தால் Grand Theft Auto 5 என்ற Video Game விளையாட 4 தினங்கள் bonus விடுப்பு வழங்க அமெரிக்க இராணுவம் முன்வந்துள்ளது. இந்த அறிவிப்பில் அமெரிக்க இராணுவம் Grand Theft Auto என்ற பதத்தை நேரடியாக பயன்படுத்தவில்லை என்றாலும் விடுப்பு காலம் Grand Theft Auto 5 விற்பனைக்கு வரும் நவம்பர் 19ம் திகதியை அண்டி […]
அமெரிக்க மத்திய அரசின் கடன் தொகை $40 டிரில்லியன் ($40,000 பில்லியன்) ஆகியது என்று செவ்வாய் அமெரிக்க இறைவரி திணைக்களம் (Treasury Department) கூறியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க கடன் $20 டிரில்லியன் ஆக மட்டுமே இருந்தது. அடுத்த 6 ஆண்டுகளில் இக்கடன் தொகை $50 டிரில்லியன் ஆகலாம் என்றும் கணிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டு அமெரிக்க Congressional Budget Office வெளியிட்ட கணிப்பின்படி 2028ம் ஆண்டே கடன் தொகை $40 டிரில்லியன் ஆகியிருக்க வேண்டும். […]
Meta நிறுவனத்தின் Facebook, Instagram போன்ற social media இணைய தளங்கள் சிறுவர்களை அடிமை ஆக்கின என்று குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் செவ்வாய் வழக்கு ஒன்று ஆரம்பமாகி உள்ளது. இந்த வழக்கு அடுத்த 6 கிழமைகளுக்கு வாதாடப்படும். சில முன்னாள் Facebook அதிகாரிகளும் Facebook க்கு எதிரான சாட்சிகள் ஆகியுள்ளனர். பல மில்லியன் எண்ணிக்கையிலான 11 மற்றும் 12 வயது சிறுவர்கள் Facebook கணக்கை கொண்டிருந்தமையை Facebook அறிந்தும் அவற்றை கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம் […]
ரஷ்யா யூகிறேனை ஆக்கிரமித்த பின்,ரஷ்யா ஏவும் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கியழிக்க, அமெரிக்கா தனது அதிநவீன, விலை உயர்ந்த Patriot தடுப்பு ஏவுகணைகளை யூகிறேனுக்கு வழங்கியது. ஆனால் பின்னர் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்து அதற்கு பெருமளவு Patriot ஏவுகணைகள் செலவாக அமெரிக்காவின் Patriot ஏவுகணை கையிருப்பு ஆபத்தான அளவுக்கு குறைந்துள்ளது. தனது கையிருப்பு குறைந்ததால் அமெரிக்கா யூகிறேனுக்கு Patriot ஏவுகணைகளை வழங்குவதை நிறுத்த, யூகிறேனிடம் உள்ள விலை உயர்ந்த ஏவிகள் ஏவுவதற்கு ஏவுகணைகள் இன்றி பயனற்று உள்ளன. அங்குள்ள 16 குழாய்களை […]
பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது ஆரம்பித்த யுத்தம் அவர்கள் எதிர்பார்த்த பலன்கள் எதையும் வழங்காது, பதிலுக்கு தோல்விகளை வழங்க அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஜூன் மாதம் ஈரானுடன் 60-தின யுத்த நிறுத்தம் (MOU) ஒன்றுக்கு இணங்கினார். அந்த 60-தின யுத்த நிறுத்தம் இன்று திங்களுடன் முடிவடைகிறது. ஆனாலும் யுத்தத்தின் அடுத்த நிலை என்ன என்பது தெளிவின்றியே உள்ளது. பெருமெடுப்பு யுத்தம் எதையும் சாதிக்காத நிலையில் ரம்ப் அணி தற்போது ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகளை அறிவிக்க […]
USS Abraham Lincoln என்ற அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் பணியாற்றும் அமெரிக்க கடற்படை உறுப்பினர் சிலர் கப்பலால் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். சுமார் 5,000 படையினருடன் ஈரான் யுத்த முனையில் போராடும் இந்த கப்பலில் நிலவும் போதிய வசதிகள் இன்மையும், தொடர்ச்சியான நீண்டகால வேலைப்பளுவும் தற்கொலை முயற்சிகளுக்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மலசலகூடங்கள் அடைதல், சுகாதார குறைபாடுகள், போதிய உணவு இன்மை போன்ற இடர்கள் அறியப்பட்டுள்ளன. ஒரு படை உறுப்பினர் கடந்த 6 மாதங்களில் […]
கனடாவில் இருந்து Pete Hoekstra என்ற கனடாவுக்கான அமெரிக்க தூதுவரை வெளியேற்ற ஆதரவு தேடும் இணைய மூல பணிக்கு (online petition) புதன்கிழமை மாலை வரையில் 70,000 கையெழுத்துக்கள் கிடைத்துள்ளன. Lee Walker என்ற Calgary நகர பெண் ஆரம்பித்த இந்த திட்டம் வரும் மாதங்களில் கனடிய பாராளுமன்றத்தில் Green Party தலைவி Elizabeth May மூலம் முன்வைக்கப்படும். கனடாவை அவமதிக்கும் அமெரிக்க சனாதிபதி ரம்பின் கூற்றுக்களை Hoekstra கனடாவில் பரப்புவதாலேயே அவரை வெளியேற்ற கேட்கப்படுகிறது. குறிப்பாக கனடா […]